முக்கிய செய்திகள்

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலில் சிவனுக்கு நேற்று 1000 கிலோ அரிசியால் வடிக்கப்பட்ட சாதத்தால் அன்னாபிஷேகம்.

1000 கிலோ எடையிலான அனைத்துவித காய்கறிகள், பழங்களுடன் சிறப்பு அலங்காரம்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவபெருமானை வணங்கி சென்றனர்.

தற்போது வி.வி. மினரல்சுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி ரெய்டு! வைகுண்ட ராஜன் வீட்டிலும் சோதனை,!

பிரபல கடல் தாது மணல் ஏற்றுமதி நிறுவனமான வி.வி.மினரல்சுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது வைகுண்டராஜன் என்பவருக்கு சொந்தமான வி.வி.மினரல்ஸ்.

இவரது சகோதரரின் நிறுவனம் பிஎம்சி. நெல்லை மாவட்டம் குட்டம் உள்ளிட்ட இடங்களில் ஆலை அமைத்து, கடற்கரையிலுள்ள மணலை அள்ளி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது பிஎம்சி நிறுவனம். இதனால் கடலோர பகுதியிலுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு புற்றுநோய் பரவுவது, நிலத்தடி நீர் உவர்ப்பாய் மாறி குடிக்க நீரில்லாமல் போனது என பல புகார்களை முன் வைத்து மக்கள் குமுறினர். இதையடுத்து ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மணல் அள்ள தடை விதித்தார்.

இதேபோல, விவி நிறுவனமும் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது. ஆனால் விவி நிறுவனம் டிவி சேனல் செய்தி ஊடக துறை உட்பட வேறு பல தொழில்களிலும் இறங்கியுள்ளது. இந்த நிலையில்தான், வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

திசையன்விளை, சென்னையில், எழும்பூர், திருவான்மியூர் உட்பட பல இடங்கள், நெல்லை, தூத்துக்குடி உட்பட பல பகுதிகளில் உள்ள வி.வி. மினரல்ஸ்சுக்கு சொந்தமான அலுவலகங்கள், வைகுண்டராஜன், அவரது மகன்களின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தாதது, கணக்கில் காட்டாத அளவுக்கு வருமானத்தை குவித்தது உள்ளிட்டவை காரணமாக வருமான வரி சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும்.சபாநாயகர் முடிவில் தவறு இல்லை தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை – நீதிபதி எம்.சத்தியநாராயணன்.

அதிமுக அரசு கவிழ்ந்துவிடும் என்ற கனவு பலிக்காது – துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.

சபரிமலையில் வன்முறையை தூண்டியதாக 210 பேருக்கு கேரள காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்.

சபரிமலை கோவில் பக்தர்களுக்கு சொந்தமானது: பினராயி விஜயன் விமர்சனத்துக்கு பந்தள ராஜ குடும்பம் பதிலடி.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தாலும் தமிழக அரசு கவிழாது. ஓ.பன்னீர்செல்வம்- தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் எந்தக் காலத்தில் கவிழ்ந்திருக்கின்றன ? – பாமக தலைவர் ராமதாஸ்.

கட்டாய விடுப்பில் சென்றுள்ள சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் வீட்டை நோட்டமிட்ட 4 பேரிடம் விசாரணை : அலோக் வர்மா வீட்டின் முன் சுற்றிக்கொண்டிருந்த 4 பேரை பிடித்து டெல்லி போலீஸ் விசாரணை.

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கவில்லை.

ஆண்களும் பெண்களும் சமம் என்று சொல்வது முட்டாள் தனம் : நடிகை ஓவியா.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 29ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு.

ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் என தகவல்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆல் ரவுண்டர் ப்ராவோ சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது

எப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் – முதலமைச்சர் பழனிசாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *