முக்கிய செய்திகள்

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்’ என சீமான் காட்டமாகத் தெரிவித்துள்ளார்

முசிறி கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது 47). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி(45). இருவருக்கும் திருமணம் நடைபெற்று சுமார் 20 வருடங்களுக்குமேல் ஆகிறது. இந்நிலையில் சாந்தி 10 பிரசவங்களில் 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதில் மூன்றாவது பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. குறிப்பாக அனைத்து குழந்தைகளுமே அவரது வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளன

மைசூரில் இருந்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்னை ரிசர்வ் வங்கிக்கு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. நேற்றிரவு அமைந்தகரை பகுதியில் வந்தபோது அந்த லாரி திடீரென பழுதாகி நின்றது. சோதனையில் கியர் பாக்சில் பழுது ஏற்பட்டது தெரிய வந்தது.அதை உடனே சரிசெய்ய முடியாததால் கன்டெய்னர் லாரி சாலையின் நடுவில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பணத்துடன் நின்று கொண்டிருந்தது. தகவலறிந்த பொதுமக்கள் அங்கு ஆர்வமுடன் திரண்டனர். பொதுமக்கள் கூடுவதை அறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பில் ஈடுபட்டனர். மேலும், லாரி பாதுகாப்பாக வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பணம் இருந்த கன்டெய்னரை யாரும் நெருங்காமல் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் மீட்பு வேன் அங்கு வரவைக்கப்பட்டு, கன்டெய்னர் லாரி ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சுமார் ஒருமணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் ஷியாம் சுந்தர் வர்மா. சமீபத்தில் இவரது கடைக்கு ஒரு தம்பதியினர் வந்தனர். தங்க நகைகள் வாங்க வந்துள்ளோம் எனக்கூறிய அவர்கள், அங்கிருந்த நகைகளில் சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு 59 கிராம் எடையுள்ள தங்க நகைகளை வாங்கினர். அதன்பின்னர் அவர்கள் அதற்கான பணத்தை ஷியாம் சுந்தர் வர்மாவிடம் கொடுத்து விட்டு அவசரமாக அங்கிருந்து சென்று விட்டனர்.பணத்தை எண்ணி வைக்கும்போது, ரிசர்வ் வங்கி ஆப் இந்தியா என்ற இடத்தில் எண்டர்டெயின்மெண்ட் ஆப் இந்தியா என இருப்பதை கண்டு ஷியாம் சுந்தர் அதிர்ந்தார். தனக்கு வழங்கிய பணம் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டு என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் ஷியாம் சுந்தர் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சோதனையை மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற தம்பதியரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தியாவின் மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ-ன் இயக்குநர் அலோக் வர்மா, மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்த மனு தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, இது தொடர்பான விசாரணையை இரண்டு வாரங்களுக்குள் நிறைவு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிவிசி எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது

சி.பி.ஐ-இன் இரு மூத்த அதிகாரிகளுக்கிடையே உண்டாகியுள்ள மோதல் அந்த அமைப்பின் நம்பகத்தன்மையையும் மரியாதையையும் கடுமையாக பாதித்துள்ளதாக கூறுகிறார் சி.பி.ஐ அமைப்பின் முன்னாள் இயக்குநரும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை விசாரித்த குழுவுக்கு தலைமை வகித்தவருமான ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கார்த்திகேயன்

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வெளிவந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்திருப்பதாக தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார்

கோவையில் உள்ள ஒரு பிரபலமான தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட இளையராஜா தான் ஆன்மீக அனுபவங்கள் பற்றி கூறிய போது அரங்கில் இருந்த மாணர்கள் விசில் அடித்ததால் அவர்களை கம்யூனிஸ்டுகள் என கூறினார்

நடிகர் ரஜினிகாந்த் திடீரென இன்று தனது ரசிகர்களோடு கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்
அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாலிதழான நமது அம்மா இந்த 18 பேரை விமர்சித்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கூடா நட்பு கோர்ட்டால் முடியும் என்ற பெயரில் தினகரன் ஆதர்வாளர்களை கேலி செய்யும் விதமாக கவிதை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”மாஃபியாவை நம்பி மகராசி இயக்கம் விட்டு முறை தவறி போனவர்கள் முச்சந்தியில் நிற்கிறார்கள் முகவரியற்று முடிகிறார்கள்.

தறுதலையை நம்பி இலை கொண்ட இயக்கம் விட்டு தடம் மாறிப் போனவர்கள் நட்டாற்றில் நிற்கிறார்கள், நல்வாழ்வு இழக்கிறார்கள். அண்ணா திமுக என்னும் ஆலயத்தை விட்டு ஆமமூக்கன் கட்சிக்கு ஆதாயத்துக்குப் போனவர்கள் அந்தரத்தில் நிற்கிறார்கள், அரசியல் அநாதைகள் ஆகிறார்கள்” போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன
வன்முறை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், கேரள அரசின் உத்தரவுபடி சுமார் 1400 பேரை கைது செய்துள்ளனர். இதில், ஐயப்ப பக்தர்கள் மற்றும் சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடக்கம்.

இதோடு நிறுத்தாமல், மேலும் 2 ஆயிரம் பேரையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர். போலீசாரின் இந்த செயலுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இதை எதிர்த்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்துணிக்கடைகளில் வேலை செய்வோருக்கு இருக்கை அமைத்து தருவது கட்டாயம் என கேரள அரசு புது சட்டம் இயற்றியுள்ளது

நீ ரொம்ப குண்டா இருக்க..உனக்கு டைவர்ஸ் தான்: முத்தலாக் கூறி கம்பி எண்ணும் கணவன்.மத்தியபிரதேசத்தில் மத்தியபிரதேசத்தில் தந்தை ஒருவன் தனது 6 வயது மகளை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஹைதரபாத்தில் கணவன் ஒருவன் மனைவியின் கள்ளக்காதலையறிந்து அவரை கட்டிப்போட்டு எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரான்ஸில் தந்தை ஒருவர் தனது குழந்தைகளுக்கு எந்நேரமும் கொக்கக் கோலா கொடுத்துக் கொண்டே இருந்த குற்றத்திற்காக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்

ஜப்பான் பத்திரிகையாளர் ஜும்பெய் யசூடா என்பவர் சிரியா நாட்டின் தீவிரவாதிகளிடையே பிணையாளியாக பிடிபட்டு 40 மாதங்களுக்கு மேலாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரின் உடலில் உள்ள எலும்புகள் எல்லாம் நெளிந்து போகும் அளவுக்கு தொடர்ந்து சித்ரவதைகளை அனுபவித்துள்ளார்.அதில் மிக கொடூரமான விஷயம் என்னவென்றால், தூங்கும் போது குறட்டை விடக் கூடாது என கட்டாய விதி விதித்துள்ளனர் சிரியா தீவிரவாதிகள் . இதனால் மிகுந்த பயத்திற்குள்ளான யசூடா குறட்டை விடுவது மட்டுமன்றி தும்மல் முதலான எவ்வித சத்தமும் இன்றி அடக்கி வைத்துள்ளார்.இதனால் சிரமத்திற்குள்ளான அவர் கடந்த 20 நாட்கள் சாப்பிடாமலும் இருந்துள்ளார்.

இவ்வளவு கொடுமைகளை அனுபவித்து வந்த யசூடா தற்போது ஜப்பானுக்கு திரும்பி சிகிச்சை எடுத்து வருகிறார்
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது தந்தைக்கு தோழியை திருமணம் செய்து வைத்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

விஷாலை அடுத்து விஜய் சகோதரருக்கு உதவி செய்யும் விஜய்சேதுபதி.விஷாலை அடுத்து தற்போது விஜய்சேதுபதி, விக்ராந்துக்கு கைகொடுத்துள்ளார். ஆம், விக்ராந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு விஜய்சேதுபதி திரைக்கதை வசனம் எழுத ஒப்புக்கொண்டுள்ளாராம். இதற்கு முன் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்திற்கு திரைக்கதை எழுதி அனுபவம் உள்ள விஜய்சேதுபதி, தற்போது முதல்முறையாக இன்னொரு நடிகரின் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதவுள்ளார்

சிபிஐ அலுவலகங்கள் முன் காங்கிரஸ் பெரும் போராட்டம்.. ராகுல் காந்தி கைது
உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் தனபால் கேவியட் மனு தாக்கல்
பீகாரில் பரபரப்பு.. ஆபரேஷனுக்காக வைத்திருந்த காலை கவ்வி கொண்டு ஓடிய நாய்!
மனைவிக்கு நாகமச்சம் இருப்பதால் தோஷம் எனக் கூறியதை நம்பி கணவனே கூலிப்படையை ஏவி மனைவியைக் கொன்று எரித்துள்ள சம்பவம் தர்மபுரியை அடுத்த பாலக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் அமைச்சரவையில் 4 ரா உளவாளிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் அமைச்சரவையில் நான்கு அமைச்சர்கள் ரா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நான்கு பேர்தான் இந்தியாவிற்கு மைத்ரிபால சிறிசேனா பற்றிய தகவல்களை அனுப்புவது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதை கூறியதே மைத்ரிபால சிறிசேனா அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர் அமரவீராதான் என்பது குறிப்பிடத்தக்கது

பிரான்ஸை சேர்ந்த அலைன் ராபர்ட் லண்டனில் உள்ள உயரமான கட்டிடம் ஒன்றில் வேகமாக ஏறி சாதனை செய்துள்ளார் தமிழக அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும் உண்ணாவிரதம் இருக்க போவதாக முடிவெடுத்துள்ளனர்

முதல் முறையாக வழிபாடு செய்த பெருமை கிடைக்கும் என்று ஆந்திராவை சேர்ந்த ரெஹானா பாத்திமா மற்றும் சேர்ந்த கவிதா என்ற இரு பெண்களும் இருமுடிகளுடன் சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றனர்.பக்தர்களின் கடும் எதிர்ப்பால் பாதியிலேயே வீடு திரும்பினர். இந்நிலையில், வேற்று மதத்தை சேர்ந்த ரெஹானா பாத்திமாவுக்கு சுவாமி ஐயப்பன் தண்டைனை கொடுத்துள்ளார். இந்த விஷயம் தற்போது அனைத்து ஆன்மீக வாதிகள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படுகின்றது.ரெஹானா பாத்திமா பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கொச்சியில் உள்ள போட் ரெட்டி கிளையில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றி வந்தார்.

சபரிமலை விவகாரத்தில் தீவிரமாக ஈடுபட்டதைத் தொடர்ந்து அவரை பழரவிட்டம் நகரில் உள்ள கிளைக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே பழரவிட்டோம் கிளையில் இருந்து ரெஹானா பாத்திமாவை வெளியேற்ற வேண்டும் எனக் கோரி நேற்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். முன்னதாக, சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா சபரிமலையின் மாண்பையும், இந்துக்களின் உணர்வுகளையும் புண்படுத்தியதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தில் இருந்து கேரள முஸ்லிம் ஜமாத் நீக்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

கேரளாவில் மர்மமான முறையில் மரணம் அடைந்து இருக்கும் பாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட கன்னியாஸ்திரிகள் எல்லோரும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்

கடந்த 23 ந்தேதி வெளியிட்ட அறிக்கை கசப்பாக இருந்தாலும் உண்மையை புரிந்து கொண்டதற்கு நன்றி என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் முதல்-அமைச்சர் பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ள சுப்ரீம் கோர்ட் அதுகுறித்து 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது

10 முறை சேவை வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன்? என நடிகர் விஷாலுக்கு பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்

கடந்த புதனன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா தான் உலகிலேயே தூய வளிமண்டலத்தைக் கொண்டுள்ளதாக கூறி இருந்தார் . ஆனால் அது உண்மையல்ல, இவர் வெளியிட்டிருந்த கருத்து இந்த வருட ஆரம்பத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருந்த வரைபடத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருந்த கருத்தாகும். உலக சுகாதார அமைப்பின் இந்த வரைபடமானது எந்தளவிற்கு உலக மக்கள் மிகச்சிறிய நுண்துகள் கூறுகளுக்கு வெளிக்காட்டப்படுகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட வரைபடம்.துகள்களை மட்டும் வைத்து அமெரிக்கா தன்னை தூய வளிமண்டலத்தையுடைய நாடாக அறிவித்துவிட முடியாது. உண்மையில் ஓசோன் மண்டல பாதிப்பிற்கு முக்கிய காரணியாகத் திகழ்வதும் அமெரிக்காதான் என்பது குறிப்பிடத்தக்கது.”PM 2.5″ மாசுக்களின் அடிப்படையில் பார்த்தால் தூய வளிமண்டலத்தைக் கொண்ட நாடு நியூசிலாந்து. இந்தப்பட்டியலில் அமெரிக்கா உண்மையில் 7 வது இடத்தையே பெறுகிறது. தூய நகரமாக சுவீடன் முன்னிலை பெறுகிறது

மழலையர் பள்ளி ஒன்றில் நுழைந்த பெண் ஒருவர் சமையல் செய்யும் கத்தியால் 14 குழந்தைகளை வெட்டி உள்ளார்.மத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி மழலையர் பள்ளி

ஹபீஸ் சயீத்தின் 2 அமைப்புகள் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இல்லை – பாகிஸ்தான் நீதிமன்றம்

விண்வெளித்துறையிலும் இந்தியாவுக்கு போட்டியாக களம் இறங்க பாகிஸ்தான் திட்டம் !
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான விசாரணையை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டுநர்கள் 61ஆயிரம் பேரின் உரிமத்தைப் பறிக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் : முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

கோமுகி நதி அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு

மாணவர்களுக்கு அடுத்த வாரம் பஸ் பாஸ் : எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழக அமைச்சருடன் கூகுள் நிர்வாகிகள் ஆலோசனை

அதிமுகவில் பிளவு இல்லை: அமைச்சர்

நெல்லை அருகே குழந்தைக்கு சூடு வைத்த தாய் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு

இந்தியாவிலிருந்து இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்பு கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கூறி உள்ளார்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மூத்தபோராசிரியர் கோவிந்தராஜ் ஆராய்ச்சி மாணவிக்கு தொலைபேசியில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்: பல்கலைக்கழக குழு விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்து துணைவேந்தர் பாஸ்கர் உத்தரவு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *