முக்கிய செய்திகள்

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு சிறப்பு சட்டம் இயற்றக் கோரி குழந்தைகளுடன் நூற்றுக்கணக்கானோர் ஆட்சியரிடம் மனு.

புதுச்சேரியில் பெரியார் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். புதுச்சேரி அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக, அதிமுக நிர்வாகிகளும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

புதுக்கோட்டை: மேகதாது விவகாரத்தில் தற்போது வாக்கு வங்கிக்காகவே பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவுக்கு ஆதரவாக நிர்மலா சீதாராமனையும், தமிழகத்திற்கு ஆதரவாக நிதின்கட்கரியையும் பேச வைத்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். *

சென்னை: திமுக – காங்கிரஸ் கூட்டணியை பார்த்து பிரதமர் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டதில் சிக்கல் ஏதும் இல்லை என்றார். ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்*

புதுச்சேரி: புதுச்சேரியில் பெரியார் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். புதுச்சேரி அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக, அதிமுக நிர்வாகிகளும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க கூடாது என வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்கராஜ் என்பவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது  கடன் தொல்லை காரணமாக மனைவி வீரம்மாள், மகள்கள் கார்த்திகா, கந்தவர்ஷினி ஆகியோருடன் தங்கராஜ் தீக்குளிக்க முயற்சி செய்தார். மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 23 புதிய MLA-க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அம்மாநில ராஜ்பவனில் 22 காங்கிரஸ் MLA-க்கள், ஒரு ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி MLA அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். புதிய அமைச்சர்களுக்கு அம்மாநில ஆளுநர் கல்யாண்சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். *

மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கம்பூரில் கனிமவளம் தொடர்பாக மத்திய புவியியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இருந்தனர். கம்பூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அதிகாரிகள் அனைவரும் திரும்பிச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

டெல்லி: ஐ.டி. சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் தளங்கள் தங்களின் பயனாளர்களின் தகவல்களை எந்த அரசு நிறுவனங்கள் கேட்டாலும் 72 மணி நேரத்திற்குள் கொடுக்க வேண்டும் என்ற வகையில் சட்டதிருத்தம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது

டெல்லி: கணினி செல்போன்களை கண்காணிக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கணினி, செல்போன்களை கண்காணிக்க 10 துறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது

சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ஹவாலா மோசடியில் ஈடுபட்ட நீரஜ் ஓஜா மற்றும் ஜியோனிகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியாக 30 நிறுவனங்களை உருவாக்கி அதில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் போலியாக ரூ.220 கோடி மதிப்பிலான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதை ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்

ஈரோடு: டிராய் விதிமுறையின் படி கேபிள் டிவி புதிய கட்டண உயர்வை கண்டித்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கேபிள் டிவிக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள், பொது நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருச்சி, மதுரை, சிவகங்கையிலும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது

டெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா யாத்திரைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  தடையை நீக்க கோரி மேற்குவங்க மாநில பாரதிய ஜனதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

சென்னை: தமிழகம் முழுவதும் வீடு இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குளிர்காலத்தில் சாலையோரம் வசிப்பவர்கள் தங்குவதற்கு இடம் வழங்கக்கோரிய வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் விவகாரம், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட

சென்னை: விவசாய கடன் மற்றும் கல்விக் கடனை ரத்து செய்ய திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வலியுறுத்தப்பட்டது. புயல் நிவாரணப் பணிகளை தமிழக அரசு கிடப்பில் போட்டுவிட்டதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மேகதாது அணை தொடர்பாக தந்த அனுமதியை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது

ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என சென்னையில் திமுக நிர்வாகிகள் கூட்டத்துக்கு பிறகு மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். ஜனவரி 3-ம் தேதியில் இருந்து ஊராட்சி சபை கூட்டம் நடத்துவோம் என ஸ்டாலின் கூறியுள்ளார். 12,617 ஊராட்சிகளில் உள்ள மக்களை ஒருங்கிணைத்து ஊராட்சி சபை கூட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்

டெல்லி; ஜிஎஸ்டி அமல்படுத்தி 18 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாநில அரசுகளின் வரி வருவாய் 14 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் மாத வருவாய் ரூ 89,200 கோடியிலிருந்து, ரூ 97,100 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், மொத்தம் உள்ள 1216 பொருட்களில் 183 பொருட்களுக்கு எந்த வரியும் இல்லை என்றும் மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. 308 பொருட்களுக்கு 5%, 178 பொருட்களுக்கு 12% மற்றும் 517 பொருட்களுக்கு 18% வரி என சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட்டை மீண்டும் திறகக கூடாது என வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  இதனையடுத்து அவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சிறுவர்களை கொண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தினார்.

மதுரை: மதுரை மத்திய சிறையில் இருக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக முழுவதும் ஊக்கப்படுத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு நாப்கின் வழங்காமல் 2016 ம் ஆண்டு முதல் பொய் கணக்கு காட்டிய திருச்சி பெண்கள் சிறைத்துறை கண்காணிப்பாளர் ராஜலெட்சுமி மீது ஒழுங்கு நடவடிக்க எடுக்கவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிதுரைத்து உத்தரவிட்டுள்ளது.

பனிக்காலத்தில் சாலையோரத்தில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு தற்காலிகமாக இடவசதி ம், கம்பளி போர்வை வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

16 தொழில்நிறுவனங்கள் ரூ.12 ஆயிரம் கோடியில் முதலீடு செய்ய தமிழக அமைச்சரவை நிர்வாக ரீதியாக ஒப்புதல்

தொழிற்துறை விரிவாக்கத்துக்கு அமைச்சரவை அளித்த ஒப்புதல் மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என தகவல்

திருப்பூரில் குமார் என்ற கிளி ஜோசியர் பட்டப்பகலில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை

இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ஜோசியர் குமாரை வெட்டிக் கொன்று விட்டு தப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *