இன்றைய முக்கிய செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு : நாளை அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்.

தாயிடம் இருந்து சேய்க்கு எச்.ஐ.வி தொற்று பரவுவதை தடுப்பதில் உலக அளவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்.

ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை பாதுகபாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு முட்டுக்கட்டையாக உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு.

சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த திருவண்ணாமலை மாவட்டம் சி நம்மியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் கைது.

இந்திய-இலங்கை இடையேயான மீனவர் பிரச்னையின் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பதில் அரசு நல்ல முடிவை எடுக்கும் – தம்பிதுரை எம்பி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழாவையொட்டி தேரோட்டம் தொடங்கியது.

மாணவி சோபியாவின் பாஸ்போர்ட் நகல் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.

விருதுநகர் : சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.

மாணவி சோபியாவிற்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது : தமிழிசை சவுந்தரராஜன்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தல்களில் அதிமுக வெற்றிபெற்றால் நாங்கள் இணையத் தயார் நாங்கள் வெற்றி பெற்றால் அவர்கள் இணையத் தயாரா ? – புதுக்கோட்டையில் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி.

கடைமடைக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மன்னார்குடியில் இருந்து முக்கொம்புக்கு பேரணி சென்ற விவசாயிகள் தடுத்துநிறுத்தம்.

சோபியா விவகாரம் போன்ற பிரச்சினை எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஏற்பட்டாலும் அரசு நடவடிக்கை.தமிழிசை மட்டுமல்ல, ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர் உள்ளிட்டோருக்கு பிரச்சினை நடந்தாலும் அரசு நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : ஜப்பானின் நிஷிகோரியை தோற்கடித்து செர்பியாவின் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

Leave a Reply

Your email address will not be published.

fifteen − seven =