பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கஜா புயலால் தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் கடுமையான இழப்பை சந்தித்துள்ள நிலையில் முதல்வா் பழனிசாமி, பிரதமா் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்து புயல் நிவாரண நிதியை ஒதுக்குமாறு கோாிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ” கஜா புயல் பாதிப்புகள் தொடா்பான அறிக்கையை பிரதமா் நரேந்திர மோடியிடம் சமா்ப்பித்துள்ளோம். புயல் பாதிப்பு நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும் அவசர கட்டமாக ரூபாய் 1,500 கோடியை 🏛மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தொிவித்துள்ளோம்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

11 + 8 =