பி.சி. ஸ்ரீராமின் பாராட்டைப் பெற்ற ‘சர்வம் தாளமயம்’ படம்

ராஜீவ் மேனன் இயக்கத்தில்  ஜிவி. பிரகாஷ் நடிப்பில்  உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’.
இவருடன், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வினீத், டிடி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
காஷ்மீர், ஷில்லாங், ஜெய்ப்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.
இதனிடையில் 31வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
இந்நிலையில் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில்…
“இசை மீதான ஆண்களின்  ஆர்வத்தை சொல்லும் சுவாரசியமான படம்.
ஜீ.வி.பிரகாஷ் , நெடுமுனி வேனு சிறப்பாக நடித்துள்ளார்கள்.
ராஜிவ் மேனன் குழுவுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு  நாயகன் ஜீ.வி.பிரகாஷ் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் வெளியீடாக இப்படம் திரைக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *