தேவர் மகன் 2 படத்தை கன்பார்ம் செய்தார் கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடித்து இயக்கிய  ‘விஸ்வரூபம்2’ படம் சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் ’இந்தியன்-2’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் தேவர்மகன்  படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி, நாசர் உட்பட பலர் நடித்த இப்படம் 1992-ல் வெளியானது.
சூப்பர் ஹிட்டான் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாக இருக்கிறது  என்று கமல்ஹாசன் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *