தனுஷை பாலோ செய்யும் 80 லட்சம் பேர்.; தமிழ் நடிகர்களில் முதலிடம்!
ரஜினி, கமல் முதல் ஜுனியர் நடிகர்கள் வரை அனைவரும் ட்விட்டரில் அக்கௌண்ட் வைத்துள்ளனர்.
விக்ரம், அஜித் ஆகியோருக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை.
இந்நிலையில், ட்விட்டரில் புதிதாக ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார் தனுஷ்.
அதாவது பாலோயர்களின் எண்ணிக்கையில் (80 லட்சம்) 8 மில்லியனை கடந்துள்ளார் இவர்.
இதன் மூலம், அவர் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘மாரி 2’ டிசம்பர் 21-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
கொலவெறி பாடல் ஹிட், அமிதாப்புடன் இணைந்து நடித்தது, ரஜினி படத்தை தயாரித்தது, ஹாலிவுட் படத்தில் நடித்தது ஆகியவை இந்த முதலிடத்துக்கு மிக முக்கிய காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
