“அசால்ட்” படத்தலைப்பில் சிவகார்த்திகேயன்..?; எதிர்ப்பு கிளம்பியது

ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை ராஜேஷ் இயக்க நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

ஆனால் அசால்ட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வந்தன.

இதனை ரசிகர்கள் அதிகளவில் பகிரத் தொடங்கினர். இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமும் மறுக்கவில்லை.

இந்நிலையில் இதே தலைப்பில் ஒரு படம் தயாராகி வருவதாக அப்பட இயக்குனர் பூபதி ராஜா கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

3 ஆண்டுகளுக்கு முன்பே அசால்ட் என்ற பெயரில் குறும்படம் இயக்கினேன். அதை சிவகார்த்திகேயனும் பார்த்தார்.

தற்போது திரைப்படமாக எடுத்து வருகிறேன்.

இதில் ஜெய்வந்த், பருத்தி வீரன் சரவணன், செண்ட்ராயன், சோனா நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது.

படத்தின் தலைப்பை கூட 7 மாதங்களுக்கு முன்பே கில்டில் பதிவு செய்திருக்கிறோம்.

தற்போது அசால்ட் பெயரில் சிவகார்த்திகேயன் படம் உருவாகி வருவதாக அறிந்தேன். ஆனால் அது படக்குழுவினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்ற போதிலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒன்றும் சொல்லவில்லை. அவர்வெளிப்படையாக பேசினால் நல்லது. நாங்கள் நிம்மதியாக இருப்போம்” என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *