பக்கா ஸ்டோரியுடன் அஜித்துக்காக காத்திருக்கும் முருகதாஸ்
சர்கார் படத்துக்குப் பிறகு ரஜினியை வைத்து ஏஆர். முருகதாஸ் இயக்குகிறார் எனும் தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில், இயக்குநர் முருகதாஸ், அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் எங்கே போனாலும் அஜித் ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி, ‘எங்க தலையோட சேர்ந்து எப்போ படம் பண்ணுவீங்க? என்பதுதான்.
என்னுடைய முதல் படம் தீனாவில் அஜித்துடன் சேர்ந்ததுதான்.
அதன் பிறகு இத்தனை வருடங்களாகிவிட்டது. இன்னும் சேரவே இல்லை.
இப்போது தல அஜித் இருக்கும் உயரத்துக்கு தகுந்த படி ஒரு கதை பண்ணவேண்டும்.
அப்படியொரு வெயிட்டான கதையாக இருக்கவேண்டும். கதையும் ரெடி. ஆனால் அஜித் ஓகே சொல்லனும்.” என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார்.