‘திருடன் போலிஸ்’ இயக்குனரின் மற்றொரு படைப்பு ‘கண்ணாடி’

சமீபத்தில் வெளியான ‘மதுர வீரன்’ திரைப்படத்தை ‘V ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது, இதே நிறுவனம் அமலாபால் நடிப்பில் “ஆடை” எனும் திரைப்படத்தை தற்போது தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படங்களை அடுத்து “V ஸ்டுடியோஸ்” நிறுவனம் “ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் “உடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ‘கண்ணாடி’ எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’ என தமிழ் படங்களிலும் மற்றும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த இவருக்கு இப்படத்தில் ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார். இந்தியில் புகழ் பெற்ற நடிகைகள் அனுஷ்கா ஷர்மா, பர்ணீதி சோப்ரா, வாணி கபூர் போன்ற பல பிரபல வெற்றிபட ஹீரோயின்களை அறிமுக படுத்திய “யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்” நிறுவனம் ஆன்யா சிங்கை அவர்கள் தயாரித்த ‘கைதி பேண்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்திருந்தனர். அதனை தொடர்ந்து “யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்” நிறுவனம் ‘கண்ணாடி’ திரைப்படத்தின் கதையை ஆன்யா சிங்கிற்க்கு பரிந்துரைத்து “V ஸ்டுடியோஸ்” உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஆன்யா சிங்கை அறிமுகம் செய்கின்றனர்.

சந்தீப் கிஷன் மற்றும் ஆன்யா வுடன் இணைந்து ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

‘திருடன் போலிஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இப்படத்திற்க்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கி வருகிறார். ஹாரர் படங்கள் என்றாலே சம்பிரதாயமாக வந்துசெல்லும் வழக்கமான திகில் காட்சிகளாக மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு புதிய த்ரில் அனுபவங்களை வழங்கும் வகையில் திரைக்கதையை அமைத்து, திரைப்படங்களை இயக்க வருவதற்க்கு முன் பல படங்களின் VFX காட்சிகளை அமைத்த தன் சொந்த அனுபவங்களை கொண்டு இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை முன்னணி VFX ஸ்டுடியோக்களுடன் இணைந்து உண்மைக்கு நிகராக வடிவமைத்து வருகிறோம். மேலும் ஒளி மற்றும் ஒலியமைப்பின் சிறந்த பங்களிப்போடு இத்திரைப்படத்தை ஒரு ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாக்கி வருவதாக இயக்குனர் கார்த்திக் ராஜூ கூறினார்.

இசை : S.S.தமன்
ஒளிப்பதிவு: P.K.வர்மா
படத்தொகுப்பு: K.L.பிரவின்
கலை: விதேஷ்
ஸ்டண்ட்: ‘ஸ்டன்னர்’ சாம்
பாடல்கள்: யுகபாரதி
நடனம்: ஷெரிஃப்
சவுண்ட் டிஸைன்: சம்பத் ஆழ்வார்
நிர்வாக தயாரிப்பு: கிருபாகரன் ராமசாமி
தயாரிப்பு: விஜி சுப்ரமணியன் & சாந்தி ஸ்ரீனிவாச குரு

வேகமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசை விரைவில் வெளிவரவிருக்கிறது.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *