அஜித்தின் அடுத்த படமான தல-59 படம் பற்றி வினோத் விளக்கம்

விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித்தின் அடுத்த படத்தை வினோத் இயக்கவுள்ளார் என்ற செய்திகள் வெளியானது.

இவர் அண்மையில் சூப்பர் ஹிட்டான தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கியவர்.

இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பிங்க் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என கூறப்பட்டது.

இதுகுறித்து டைரக்டர் எச்.வினோத் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் எனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும். மற்றபடி என் பெயர் மூலம் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

மேலும், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் எனக்கு கணக்கு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வினோத் விளக்கம் அளித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *