RRR படம் தொடங்கியது.; ராஜமௌலி-ராம்சரண்-ஜுனியர் என்டிஆர் கூட்டணி

பாகுபலி 1 மற்றும் 2′ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜமௌலியின் படங்களுக்கு இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் ராஜமவுலி இயக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் படப்பிடிப்பு திங்கள் (நவ., 19) முதல் ஆரம்பமாகியுள்ளது.

ஹைதராபாத் அருகில் உள்ள கொக்க பேட் என்ற இடத்தில் இதன் சூட்டிங்கை தொடங்கியுள்ளனர்.

இதிலி பிரபல தெலுங்கு ஹீரோக்களான ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இருவரும் நடிக்கின்றனர்.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், ஆலியா பட் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நாயகிகளாக நடிக்க வாய்ப்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

முதன் முதலாக ராஜமௌலி இயக்கிய ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’ படத்தின் நாயகனாக ஜுனியர் என்டிஆர் நடித்திருந்தார்.

அதுபோல் ‘மகதீரா’ படத்தில் ராம் சரணை இயக்கினார் ராஜமவுலி.

தற்போது இவர்கள் மூவரும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் உருவாகுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published.

7 + 19 =