இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ் போடும் குண்டு

ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கினார் ரஞ்சித்.

இதனையடுத்து அவர் புதிய படம் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென படத்தயாரிப்பில் ஈடுப்பட்டார்.

நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில்மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான “பரியேறும் பெருமாள்” படத்தை தயாரித்தார்.

 

தற்போது நீலம் புரொடக்சன்ஸ்நிறுவனம் சார்பில் இரண்டாவது படத்தை தயாரிக்கிறார்.

 

“இரண்டாம் உலகப் போரின் கடைசிகுண்டு” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை அதியன் ஆதிரை என்கிற புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.

 

இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் மெட்ராஸ்கபாலிகாலா ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.

 

கதாநாயகனாக தினேஷ் நடிக்கிறார். நாயகிகளாக அனேகாரித்விகா ஆகியோர் நடிக்கிறார்கள்.இவர்களுடன் லிஜீஷ்முனீஸ்காந்த் ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கிறார்கள். இசையமைப்பாளராக தென்மா அறிமுகமாகிறார்.

 

ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார்,படத்தொகுப்பாளராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணியாற்றுகிறார்கள். பாடல்களை உமாதேவிஅறிவு,தனிக்கொடிதங்கவேலு ஆகியோர் எழுதுகிறார்கள்.

 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *