போலீசரால் கைது செய்யப்பட்ட எலி பட தயாரிப்பாளர்
பண மோசடி வழக்கில் எலி திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். வடிவேல் கதாநாயகனாக நடித்த எலி திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பாளர் மதுரை சதீஷ்குமார், படத்தயாரிப்புக்காக சினிமா பைனான்சியர் சைதாப்பேட்டை ராம்குமாரிடம் ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார் .
படம் வெளிவந்த ஒரு மாதத்தில் பணத்தை வட்டியுடன் திருப்பித்தருவதாக கூறியுள்ளார்.2 வருடத்துக்கு மேல் ஆகியும் பணத்தை திருப்பித்தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். கடந்த பிப்ரவரிமாதம் பணத்தை தி்ருப்பிக்கேட்டபோது தரமுடியாது என மறுத்து மி்ரட்டியுள்ளார்.
இதுகுறித்து ராம்குமார் மத்திய குற்ற ப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில். தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை சென்னை மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பைட்…..ராம்குமார், சினிமா பைனான்சியர்.