“எனக்கா ரெட் கார்டு..” பாடல் மூலம் விஷாலுக்கு சிம்பு எச்சரிச்கையா..?

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை எடுத்தார். படம் படு தோல்வி அடைந்தது.

இதனால் சிம்பு தனக்கு நஷ்டத்தை திருப்பித் தர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் புகார் செய்தார்.

இதனையடுத்து சிம்புக்கு ரெட் கார்டு (அதாவது படங்களில் நடிக்கத் தடை) என்ற தகவல்கள் வெளியானது.

தற்போது சுந்தர் சி. இயக்கும் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ என்ற படத்தி நடித்து வருகிறார் சிம்பு.

இப்படத்தில் “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என ஒரு பாடல் வரிகள் வருகின்றன.

இந்த பாடல் விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த பாடலின் வரிகள் விஷாலுக்கு சிம்பு தெரிவிக்கும் எச்சரிக்கையாக இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *