நேஷனல் இன்ஜினியர்கள் தினம் இன்று

நேஷனல் இன்ஜினியர்கள் தினம் இன்று

⚙நம் ரெகுலர் லைஃப்பில் டெய்லி கண்டிப்பாக ஓர் இன்ஜினியரை மீட் பண்ணாம இருக்க முடியாது. வீடு, ஆபீஸ், பாலம் போன்ற கட்டங்கள் கட்டுவதற்கு சிவில் இன்ஜினியர், மின்சாரம் சார்ந்த பிரச்னைகளுக்கு எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், வாகனங்கள் சார்ந்த விஷயங்களுக்கு மெக்கானிக்கல் இன்ஜினியர் இப்படி பொறியாளர் எனப்படும் இன்ஜினியர்களின் உதவி இல்லாமல் இன்றைய உலகில் வாழ முடியாது.

இப்படியான என்ஜினியர்கள் அனைவருக்கும் முதன்மை என்ஜினியராக இருந்த ஒருவரின் பிறந்தநாளே இந்தியாவில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆம்.. கர்நாடக மாநிலத்தில் பிறந்த மோக்சகுந்தம் விஸ்வேஸ்வரையா தான் அந்தப் பெருமைக்குரிய இன்ஜினியர். “சர் எம்.வி” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். புனே பல்கலைக்கழகத்தின் காலேஜ் ஆப் எஞ்சினியரிங் கல்லூரியில் படித்த இவர், மும்பை பொதுப் பணித்துறையில் பணியாற்றி, பிறகு இந்திய நீர்பாசனத்துறை கமிஷனில் பொறியாளராக அரசால் நியமிக்கப்பட்டார்.

⚙இந்திய அரசு இவரை ஆப்பிரிக்காவின் ஈடன் நாட்டுக்கு நீர் மற்றும் கழிவு நீர் குறித்து படிப்பதற்கு அனுப்பியது. இந்தியாவின் முதல் மற்றும் முதன்மை இன்ஜினியர் இவர் தான். மைசூர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜ சாஹர் அணை கட்டும்போது தலைமை இன்ஜினியராக பணிபுரிந்தவர். இந்த அணை கட்டும்போது, ஆசியாவின் மிகப் பெரிய நீர்த்தேக்கமாக கருதப்பட்டது மட்டுமல்லாமல், பல தொழில்நுட்ப வல்லுனர்களால் பாரட்டப்பட்டது.

⚙மேலும் மைசூர் திவானாக ஏழு ஆண்டுகள் பதவி வகித்த இவர் “நவீன மைசூரின் தந்தை” எனவும் அழைக்கப்படுகிறார். சிறந்த இன்ஜினியராக திகழ்ந்த சர்.எம்.விக்கு 1955 ஆம் ஆண்டில் நாட்டின் உயரிய விருதான “பாரத் ரத்னா” விருது வழங்கி கெளரவித்தது

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தியாவின் முதன்மைப் பொறியாளரை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ள இந்தத் தினம், பொறியியல் துறையின் மகத்துவத்தையும் பறைசாற்றுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published.

sixteen − 10 =