சர்கார் படத்தை திரையிட்ட தியேட்டர்கள் மீதும் வழக்கு பதிய அமைச்சர் முடிவு

துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் சர்கார்.

இந்த திரைப்படம்  தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

இப்படத்தில் இன்றைய மோசமான அரசியல் சூழ்நிலையை நக்கலடித்திருந்தனர்.

அவை மட்டுமில்லாமல் ஓட்டுக்கு பணம், அரசியல்வாதிகளின் அராஜகம், முதல் கள்ள ஓட்டு வரை அனைத்தையும் கலாய்த்திருந்தனர்.

இது குறித்து தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜீ எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

தற்போது மற்றொரு அமைச்சரான சி.வி. சண்முகம் அவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் வழக்கு பதியப்படும்.

மேலும் சர்கார் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீதும் வழக்கு பதியப்படும்.” என தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *