எழுமின் திரை விமர்சனம்

நடிகர்கள்:  விவேக், தேவயாணி, அழகம்பெருமாள்,

வில்லன் ரிஷி, பிரேம்குமார், ஜெயச்சந்திரன், செல் முருகன் மற்றும் பலர்.

இசை  – கணேஷ் சந்திரசேகரன்

இயக்கம் மற்றும் தயாரிப்பு – விஜி

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்

பின்னணி இசை – ஸ்ரீகாந்த் தேவா

பிஆர்ஓ. – குமரேசன்

கதை எப்படி..?

பள்ளி மாணவர்கள் படிப்பே வாழ்க்கை என்றில்லாமல் சிலம்பம், கராத்தே, பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை பயின்றால் வாழ்க்கையில் தங்களை கற்காத்துக் கொண்டு முன்னேறலாம் என்பதே இப்படத்தின் கரு.

விவேக் வேதயாணியின் மகன் அர்ஜீன். பள்ளி மாணவரான இவர் பாக்ஸிங்கில் சாம்பியன் பட்டம் வெல்ல நினைத்து முயற்சிக்கிறார். இவருடன் பல மாணவர்கள் பயின்றாலும் அதில் 5 பேர் இவருக்கு நண்பர்கள்.

முன்னணி நிறுவனமான அழகம் பெருமாள் நடத்தும் ஸ்போர்ட்ஸ் அகடாமியில் அதிக கட்டணத்துடன் இவர்கள் பயில்கிறார்கள்.

ஒரு சூழ்நிலையில் பயிற்சி கட்டணம் கட்ட முடியாமல் நண்பர்கள் 5 பேரும் பயிற்சியில் இருந்து நிருத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் ஒரு போட்டியில் கலந்துக் கொண்டு சாம்பியன் பட்டம் வெல்லும் போது மிகுந்த மகிழ்ச்சியில் ஹார்ட் பீட் அரெஸ்ட் ஆகி இறக்கிறார் அர்ஜீன்.

எனவே தங்கள் மகனின் ஆசைப்படி திறமையான மாணவர்களுக்காக இலவச பயிற்சி கொடுக்க நினைத்து ஒரு அகடமி ஆரம்பிக்கிறார் விவேக். இதில் அர்ஜீனின் நண்பர்கள் இணைந்து பயில்கிறார்கள்.

இதனால் இரு அகடமிகளுக்கும் போட்டி ஆரம்பமாகிறது. அதன் பின்னர் நடந்த போட்டிகளில் யார் வென்றார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பிரவீன், ஸ்ரீஜித், வினீத், சுகேஷ், கிருத்திகா, தீபிகா இவர்கள்தான் அந்த மாணவர்களாக நடித்துள்ளனர். வெறுமனே நடிப்பு என்றில்லாமல் நிஜமாகவே நல்ல பயிற்சி பெற்றவர்கள் இவர்கள்.

எனவே நடிப்பில் யதார்த்தம் கலந்த ஆக்சனுடன் பின்னி எடுத்துள்ளனர். அதிலும் கிளைமாக்ஸ் பைட்டில் 5 பேரும் அசத்தியுள்ளனர்.

விவேக் தேவயானி இருவரும் மகனின் ஆசையறிந்து பாக்ஸிங் பயிற்சி கொடுக்கும் நல்ல தம்பதிகள். ஆனால் மகனின் இறப்புக்கு பிறகு இவர்களிடம் உள்ள சோகம் போதவில்லை என்றே தோன்றுகிறது. இன்னும் எமோசன் தேவை சார்.

பண பலம் கொண்டவராக அழகம் பெருமாள். நிறைவான நடிப்பு.

வில்லன் ரிஷி நல்ல லுக். தாடியை எடுத்துவிட்டால் ஹீரோ லுக்குதான்.

போலீஸ்காரர்களாக வரும் பிரேம்குமாரும் ஜெயச்சந்திரனும் நல்ல கம்பீரம். ஆனால் இவர்கள் செய்ய வேண்டியதை மாணவர்களே செய்துவிடுகிறார்கள்.

செல் முருகன் படத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான். காமெடியில்லை.

ப்ளஸ் என்ன..?

தன்னை காத்துக்கொள்ள தற்காப்பு கலை அவசியம் என சொல்லும் படம்.

க்ளைமாக்ஸ் பைட்டும் மாணவர்களின் சாகசமும்.

பின்னணி இசையும் பாடல்களும்.

மைனஸ் என்ன..?

முதல் பாதியில் நடக்கும் போட்டிகளில் பிரம்மாண்டம் இல்லை. ஏதோ செட்டிங் போட்டு 10 முன்னிலையில் நடப்பது போல் உள்ளது.

எங்கே நீ போனாய்.. பாடல் நன்றாக இருந்தாலும் தனுஷ் குரல் எடுபடவில்லை.

படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் விஜி. அவரும் ஒரு மாணவனின் தந்தையாக வருகிறார்.

கொள்ளை, கொலை, பாலியல் தொல்லைகள் நிறைந்த இந்த சமுதாயத்தில் தற்காப்பு கலை பயின்றால் மட்டுமே தங்களை கற்காத்து சொல்ல முடியும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

குடும்பமாக பார்க்கும் வகையில் படம் வருமா? என்று ஏங்கும் இந்த சமயத்தில் ஆசிரியர்களுடன் மாணவர்கள் பார்க்கும் படமிது.

எழுமின்… தற்காப்பு கலை விழிப்புணர்வு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *