அதிகாலை காட்சிகள் ரத்தானதால் சர்கார் மீது கடுப்பான விஜய் ரசிகர்கள்

சன் பிக்சர்ஸ், முருகதாஸ் மற்றும் விஜய் ஆகியோரது கூட்டணியில் உருவான சர்கார் படம் தீபாவளியை முன்னிட்டு செவ்வாய்கிழமை நவ. 6ஆம் தேதி வெளியாகிறது.

ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை.. இவர்கள் நடித்த படங்கள் வெளியானால் ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணிக்கே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வருவது தற்போது வாடிக்கையாகியுள்ளது.

எனவே விஜய்யின் சர்கார் படத்திற்கு அதிகாலை 4 மணிக்கே காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் முதல் காட்சிகள் காலை 6 மணிக்கு தான் ஆரம்பமாகிறதாம்.

அதற்கு முன் அதிகாலை காட்சிகளுக்கு எந்த தியேட்டரிலும் முன்பதிவு செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை சிறப்புக் காட்சிகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாலும் அரசு தரப்பிலும் கடுமையான கெடுபிடி இருப்பதாலும் அதிகாலைக் காட்சிகளை ரத்தாகி உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் விஜய் ரசிகர்கள் சர்கார் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published.

1 + 7 =