கூத்தன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல நடிகர் இளைய திலகம் பிரபு

தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் கூத்தன்.
இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல நடிகர் இளைய திலகம் பிரபு அவர்கள் வெளியிட்டார்.தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன், கதாநாயகன் ராஜ் குமார், இசையமைப்பாளர் பாலாஜி ஆகியோரை தனது வீட்டில் சந்தித்ததார். தயாரிப்பளர் நீல்கிரீஸ் முருகன்  இளைய திலகம் பிரபுவிற்கு பொன்னாடை அணிவிக்க நாயகன் ராஜ்குமார் பூங்கொத்து வழங்கினார்.
 இளைய திலகம் பிரபு,  கூத்தன் படம்,  பட உலகை கதை களமாக  கொண்டு உருவாகியுள்ளதை கேட்டு  படக்குழுவை பராட்டினார். கூத்தன் படத்தின் விவரங்களை கேட்டறிந்த அவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக உள்ளதாகவும் படம் மிகப்பெரிய வெற்றி அடையவும் வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் ஹீரோ ராஜ்குமார் மிக அழகாக, திறமைவாய்ந்தவராக இருக்கிறார். அவர் மிகப்பெரிய ஹிரோவாக வருவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சினிமாவை பின்னனியாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.  சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் A L வெங்கி. சினிமாவை பின்னனியாகக் கொண்டு இதுவரை நிறையப்படங்கள் வந்திருந்தாலும், இந்தப்படம் புதிய கோணத்தில் இதுவரை இல்லாத துணைநடிகர்களின் வாழ்க்கையை பேசும் படமாக இருக்கும்.
அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் பாலாஜி இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவு மாடசாமி, படத்தொகுப்பு பீட்டர் பாபியா, கலை சி.ஜி.ஆனந்த், நடனம் அசோக் ராஜா, சுரேஷ், நிர்வாக தயாரிப்பு மனோஜ் கிருஷ்ணா ஆகியோர் பணிபுரிந்துள்ளார்கள்.
தயாரிப்பு நீல்கரிஸ் முருகன், நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டைன்மெண்ட் வழங்கும் கூத்தன் திரைப்படம் இறுதிகட்ட வேலைகளை நெருங்கியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் பலத்த எதிர்பாரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *