ரஜினி பாட்டுக்கு விஜய் மீம்ஸ் போட்டு கலாய்த்த கங்கை அமரன்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த டிசம்பர் 3ஆம் தேதி என்ற மரண மாஸ் என்ற பாடலை மட்டும் வெளியிட்டனர்.
அந்த பாடல் ரஜினி ரசிகர்களுக்கிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த பாடலின் பெரும்பகுதியை அனிருத்தே பாடியிருந்தார். சில நொடிகள் மட்டும் வரிகளை ரஜினிக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் அதுகுறித்து தனது கருத்தினை விஜய்யின் மீம்ஸ் போட்டு அனிருத்தை கலாய்த்துள்ளார்.
அதில் சர்கார் படத்தில் தேர்தலில் வாக்களிக்க விஜய் சென்னை வருவார்.
ஆனால் அவர் ஓட்டை வேறு யாரோ ஒருவர் போட்டுவிடுவார்.
அதுபோல் விஜய்யை எஸ்பிபியாக சித்தரித்து அந்த மீம்ஸை டிசைன் செய்துள்ளனர்.
ரஜினிக்காக ஓப்பனிங் பாடல் பாட வந்தேன் என எஸ்பிபி கூறுவதும் போலவும் அவர் பாட வேண்டிய பாட்டை அனிருத்தே பாடிட்டாராம் பா என மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர்.