வடிவேலுடன் நல்ல நட்பு இருக்கு..; அவருடன் மீண்டும் நடிக்க ஆசை.. : விவேக்
சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் தன் சமீபத்திய பேட்டியில் வடிவேலுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசை என பேசினார்.
அதில் விவேக் கூறியதாவது:
இப்போது உள்ள காமெடி நடிகர்களில் சூரி மிகச்சிறப்பாகப் பண்ணுகிறார்.
பழகுவதற்கும் இனியவராக இருக்கிறார்.
மற்றபடி, எப்பவுமே வடிவேலு காமெடிதான் ரொம்பவே பிடிக்கும். வி.சேகர் இயக்கத்தில் வடிவேலுவும் நானும் சேர்ந்து நடித்திருக்கிறோம்.
எங்களைத் தனித்தனியாகவும் மக்கள் ரசித்தார்கள். சேர்ந்து நடித்த போதும் ரசித்தார்கள். மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.
அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதேபோல என்னை அவருக்கு நன்றாகவே பிடிக்கும்.
நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்வதில்லை. சந்தித்துக்கொள்வதில்லை.
ஆனாலும் நல்ல நட்பு இருக்கிறது.
இவ்வாறு நடிகர் விவேக் தெரிவித்தார்.