கஜா புயல்-திருவாரூரில் ஆளுநர் ஆய்வு

கஜா புயலால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொண்டார். மன்னார்குடியை அடுத்துள்ள காசான்குளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர், அந்த பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் சேரி ஊராட்சிக்கு சென்ற அவர் உயர்மின் சீரமைப்பு பணிகளையும், முறிந்து கிடந்த தென்னை மரங்கள் மற்றும் சேதமான பயிர்களையும் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்குமாறுஅறிவுறுத்தியுள்ளார். மேலும், புயலால் வீட்டை இழந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இவருடன் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் மற்றும் அதிகாரிகளும் ஆய்விற்கு சென்றுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *