பிறந்த நாள் கொண்டாடும் கிரீன் விச் நேரம்

கிரீன்விச் நேரம் என்பது, தென்கிழக்கு லண்டனில் அமைந்துள்ள கிரீன்விச் வானிலை ஆய்வுக்கூடத்தின் நேரே உள்ள ஜீரோ மெரிடியன் லைன்(Zero Meridian Line) மீது சூரியன் கடந்து செல்வதை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகிறது.

அதாவது பூமி உருண்டை என்று விஞ்ஞான பூர்வமாக முடிவான பின்பு, இந்த பூமிப்பந்தின் ஒரு பகுதியை தொடக்கமாகக் கொள்ள முடிவு செய்தனர். மேலும் இடத்தை சுலபமாக அடையலாம் கண்டு கொள்ள கடக ரேகை, அட்ச ரேகை போன்ற கற்பனைக் கோடுகளை உருவாக்கினர்.

இதில் மையக்கோட்டை ‘0’ டிகிரி என வைத்தனர்.இதுதான் உலக நாடுகளின் நேரத்துக்கு ஆதாரமானது. இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘கிரீன்விச்‘ என்ற நகரின் மீது செல்வதால் இந்த கோட்டிற்கு அதே பெயரை வைத்தார்கள். நேரத்திற்கு ‘கிரீன்விச் மெரிடியன் டைம்‘ என்று பெயர் வைக்கப்பட்டது. இதை சுருக்கமாக கிரீன்விச் நேரம் என்றனர்.

இந்த ‘0‘ டிகிரி ‘லாங்கிடியூடில்‘ என்ன நேரம் காட்டுகிறதோ அதை மையமாக வைத்து தான் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் நாட்டின் நேரத்தை டிகிரி வித்தியாசத்துக்கு ஏற்றபடி சரியாக கணக்கிட்டு வைத்துக்கொள்கின்றன.

இந்தியாவின் கடிகார நேரம் அலகாபாத் வழியாகச் செல்லும் 82.5 டிகிரி லாங்கிடியூட்டை வைத்துதான் சொல்லப்படுகிறது. இந்திய நேரத்துக்கும் கிரீன்விச் நேரத்துக்கும் 5.30 மணி நேர வித்தியாசம் உள்ளது. அதாவது நமக்கு விடிந்து ஐந்தரை மணி நேரம் கழித்துதான் கிரின்விச்சில் விடியும்.

கடந்த 1884ம் ஆண்டு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற மாநாட்டி ல் இதே நாளில்தான் கிரீன்விச் நேரத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே மாநாட்டில் பாரிஸ் தீர்க்க ரேகை நேரத் திட்டத்தை ஏற்க பிரான்ஸ் நாடு வலியுறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரீன்விச் நேரம் என்பது 1972ம் ஆண்டில், சர்வதேச ஒருங்கிணைந்த நேரம்(Universal Coordinated Time – UTC) என்று பெயர் மாற்றப்பட்டாலும், கிரீன்விச் நேரம் என்ற பெயரும் தொடர்ந்து இருந்து வருகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published.

two × 1 =