ஹன்சிகா பற்றி ட்விட் செய்த தனுஷ்
இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்தாலும் தமிழில் நாயகியாகத்தான் அறிமுகமானார் ஹன்சிகா.
தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில்தான் தமிழில் அறிமுகமானார் இவர்.
அதன்பின்னர் விஜய், சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்று 50 படங்களை தொட்டுவிட்டார்.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி தன் பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறாராம் ஹன்சிகா.
அன்றைய தினத்தில் அவரின் 50 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இந்த அறிவிப்பை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.