இந்தியாவில் முதல் முறையாக, 300 MBPS வேகத்துடன் 2 TB டேட்டாவை ஹாத்வே பிராட்பேண்ட் வழங்குகிறது

இந்தியாவில் முதல் முறையாக, 300 MBPSவேகத்துடன் 2 TB டேட்டாவை ஹாத்வே பிராட்பேண்ட் வழங்குகிறது

6 மாதங்களுக்கு ரூ.9999 மற்றும் 12 மாதங்களுக்கு ரூ.14,999 முதல் துவங்கும் விலைகளில், 300 MBPS வேகத்துடன் 2 TB டேட்டா டவுன்லோடு வசதி

இச்சேவையின் ஒரு பகுதியாக வைஃபை மெஷ் இலவசமாக வழங்கப்படும்.

சென்னை, 10 செப்டம்பர் 2018 இந்தியாவின் முன்னணி ஃபிக்ஸ்டு லைன் பிராண்ட்பேண்ட் இணைய சேவை வழங்குனரகத் திகழும் ஹாத்வே கேபிள் அண்டு டேட்டாகாம் லிமிடெட், சென்னையில் அதன் மேம்படுத்தப்பட்ட சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுகத்துடன், பிராட்பேண்ட் மற்றும் வயர்டு இணைய சந்தையில் ஒரு புதிய தரக்குறியீட்டினை உருவாக்கும் வகையில், இந்நிறுவனம் 300 MBPS வேகத்துடன் 2 TB டேட்டாவை வழங்கவுள்ளது.

உள்ளடக்க பயன்பாடு (நெட்ஃபிளிக்ஸ், சன்NXT, யப் டிவி.. இன்ன பிற), வர்த்தக மற்றும் தகவல் தொடர்புகள், அதிகளவில் ஆன்லைனில் மேற்கொள்ளப்படுவது அதிகரித்திருப்பதனால், உயர் வேகம் மற்றும் நம்பத்தக்க சேவைகளுக்கான தேவைப்பாடு உயர்ந்து வருகிறது மற்றும் உலகளாவிய போக்குகளின்படி, அன்லிமிடெட் டேட்டா டவுன்லோடுகள் வயர் லைன் பைபர் ப்ராட்பேண்டிற்கு அதிக தேவைப்பாட்டினையும் உருவாக்கியுள்ளது. சென்னை நகரிலுள்ள பெரும்பாலான இயக்கர்கள் 50 GB டேட்டா அளவுகளை வழங்கி வரும் நிலையில், கட்டுப்படியாகும் விலையில், 300 MBPS வேகத்துடன் 2 டேட்டா வழங்கும் ஹாத்வேயின் திட்டம், பயனர்களின் ஆன்லைன் அனுபவ அளவை மேலும் மேம்படுத்தவுள்ளது.

சென்னையில் இந்த ஹாத்வே சேவையை அறிவித்துப் பேசிய ஹாத்வே நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு.ராஜன் குப்தா அவர்கள், பிராட்பேண்ட் மற்றும் உள்ளடக்க பயன்பாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவில் முதல் முறையாக, இச்சேவையை வழங்குவதில் ஹாத்வே மிகுந்த மகிழ்ச்சியடைகிறது மற்றும் இச்சேவையைப் பெரும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது என்று கூறினார்.
இந்த பிராட்பேண்ட் சேவையுடன் வரும் வைஃபை மெஷ் தொழில்நுட்பம், 3000-4000 சதுர அடிகள் பரப்பளவிலான அமைவிடத்தில் மிகச் சிறந்த இணைப்பு திறனை அளிக்கிறது மற்றும் அதனால், சிக்னலில் எத்தகைய இழப்புமின்றி, பல சாதனங்களின் பரந்துபட்ட வலையமைப்பு தேவைப்பாடுகளை ஈடேற்ற முடியும். இந்த மெஷ் தீர்வுடன், வைஃபை சிக்னல் வீட்டின்/ அலுவலகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் அடையும் மற்றும் ஒட்டுமொத்த அமைவிடத்திற்குமான கவரேஜை வழங்கும். மேலும் இதன் உள்ளமைந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் வழியாக, வைரஸ்கள், மால்வேர் அல்லது ரேன்ஸம் வேர் ஆகியவற்றிலிருந்து சிறந்த பாதுகாப்பு கிடைக்கப்பெறும். இத்துடன் ஒவ்வொரு பயனுரும், ஒரு சிக்கலற்ற, பாதுகாக்கப்பட்ட மற்றும் உயர் வேகா பிராட்பேண்ட் அனுபவத்தை அனுபவிக்கலாம், என்று அவர் மேலும் கூறினார்.

வயர்லெஸ் மற்றும் வயர் லைன் பயனர்கள் என இருதரப்பிலும் சேர்த்து, இந்திய பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 100 மில்லியன் அளவினைக் கடந்துள்ளது, பிராட்பேண்ட் இணைப்புத் தன்மையின் ஆற்றலையும் மற்றும் அனைவருக்கும் சேவைகள் மற்றும் பயன்பாடுகள் கிடைக்கப்பெறுவதன் வழியாக இந்தியா டிஜிட்டல் ரீதியில் முன்னேறி வருவதையும் வெளிப்படுத்துகிறது.
ஹேத்வே குறித்து

ஹேத்வே, இந்தியாவில் கேபிள் பிராட்பேண்டு மற்றும் கேபிள் டெலிவிஷன் சேவை வழங்கல் துறைகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருந்து வருகிறது. 20 நகரங்களில் உயர்வேக கேபிள் பிராட்பேண்டு சேவைகளையும் மற்றும் 200 பெருநகரங்களில் மற்றும் நகரங்களில் கேபிள் தொலைக்காட்சி சேவைகளையும் ஹேத்வே வழங்குகிறது. இதன் தரமான கேபிள் டிவி மற்றும் பிராட்பேண்டு இன்டர்நெட் சேவைகளுக்காக இந்தியன் டெலி அவார்ட்ஸ் அமைப்பால் சிறந்த ஆளுடீ என்ற விருது ஹேத்வே-க்கு 9 முறைகள் பெறப்பட்டிருக்கிறது.

2011-ம் ஆண்டில் இன்டர்நெட் சேவைகளுக்கான டிஜிட்டல் திட்டங்களில் பிராண்டு நேர்த்தி நிலைக்கான ஸ்டார் நியூஸ் பிராண்டு எக்ஸெலன்ஸ் விருதையும் ஹேத்வே வென்றிருக்கிறது. யூரோ மணி அமைப்பால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையில் 2013-ம் ஆண்டில் ஆசியாவில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் ஊடக நிறுவங்களுள் ஒன்றாகவும் ஹேத்வே தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published.

19 − two =