பேச்சு மட்டும்தான் இருக்கு..; விஷாலை விளாசும் ஆர்கே.சுரேஷ்-உதயா

கடந்த நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘பில்லா பாண்டி’ படம் வெளியானது.

16ஆம் தேதி உதயா தயாரித்து நடித்த ‘உத்தரவு மகாராஜா’ படம் வெளியானது.

இந்த இரு படங்களும் வெற்றிப் பெறவில்லை. இந்த படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை எனவும் விஷால் சரியாக உதவவில்லை எனவும் கூறி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து உதயா,ஆர்.கே.சுரேஷ் இருவரும் விலகியுள்ளனர்.

விஷாலுக்கு நெருக்கமான இவர்களின் பதவி விலகல் கோலிவுட் வட்டாரத்தில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து உதயா கூறியதாவது…

பட வெளியீட்டை கண்காணிக்க குழு இருக்கிறது. அதில் சிறு, மத்திய, பெரிய பட்ஜெட் படங்களுக்கென தனித்தனி ரிலீஸ் தேதிகள் தரப்பட்டன.

16-ஆம் தேதி உத்தரவு மஹாராஜா, காற்றின் மொழி, செய், சித்திரம் பேசுதடி 2 ஆகிய படங்களுக்கு ஒதுக்கப்பட்டது. நாங்கள் விளம்பரங்கள் செய்த பின் திடீரென திமிரு புடிச்சவன் வெளியீட்டை அவர்கள் அறிவித்தனர்.

விஷாலிடம் தனிப்பட்ட முறையில் கேட்டபோது அந்தப் படம் வராது என்றே கடைசி நிமிடம் வரை சொன்னார். ஆனால் அந்தப் படம் வெளியானது.

ஏற்கெனவே சர்கார் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து திமிரு புடிச்சவன், அடுத்து காற்றின் மொழி, இதற்கு பிறகு தான் உத்தரவு மஹாராஜாவுக்கு ரசிகர்களின் கவனம் திரும்பும்.

படத்துக்கான விமர்சனங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ரசிகர்கள் படத்தைப் பார்க்க நினைத்தால் படம் அரங்கில் இல்லை” என கூறினார் உதயா.

இதுகுறித்து ஆர்.கே. சுரேஷ் கூறியுள்ளதாவது…

தேர்தலில் நிற்கும் போதே சிறு படங்களுக்கு நல்லது செய்யவே தேர்தலில் போட்டியிடுவதாக வாக்குறுதி கொடுத்தார் விஷால்.

இப்போது தமிழ் சினிமாவில் ரிலீஸ் சிக்கல் நிலவுகிறது. படங்கள் வெளியிடுவதில் தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளை யாரும்கடைபிடிப்பதில்லை.

அவர்கள் மீது விஷால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

எனக்கும் விஷாலுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. இப்பவும் நாங்கள் நண்பர்கள் தான்.” என ஆர்கே சுரேஷ்கூறியுள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *