இனிமே செட்டாகாது..; திமிரு புடிச்சவன் எடுத்த திடீர் முடிவு
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி படங்களை தயாரித்து தானே கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.
’நான்’, ’சலீம்’, ’இந்தியா – பாகிஸ்தான்’, ’பிச்சைக்காரன்’, ’சைத்தான்’, ’எமன்’, ’அண்ணாதுரை’, & ’காளி’ ஆகிய படங்களை இவரது மனைவி பாத்திமா தயாரித்தார்.
மேலும் இவரது நடிப்பில் ’திமிரு புடிச்சவன்’ என்ற படம் இன்று வெளியாகியுள்ளது.
இப்படத்துடன் தனது படத்தயாரிப்பைக் கைவிட விஜய் ஆண்டனி முடிவு செய்திருக்கிறாராம்.
இனி மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ள ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார்.
இசை, நடிப்பு, படத்தயாரிப்பு, பட வெளியீடு உள்ளிட்ட விஷயங்களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதால் இந்த முடிவை விஜய் ஆண்டனி எடுத்துள்ளாராம்.