மீண்டும் மீண்டும் மாதவனுடன் இணையும் ‘பேட்ட’ நாயகி

மீண்டும் மீண்டும் மாதவனுடன் இணையும் பேட்ட நாயகி

நம் இந்திய தேசத்தின் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் நம்பி நாராயாணன்.

இவர் வெளிநாடுகளுக்கு நம் நாட்டின் சில ரகசிய தொழில்நுட்பத்தை விற்றுவிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் இவர் குற்றவாளி இல்லை என கோர்ட் உத்தரவிட்டு அவரை விடுதலை செய்தது.

தற்போது இவரது வாழ்க்கை வரலாறு ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்ஸ்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது என்பதையும் அந்த விஞ்ஞானி கேரக்டரில் மாதவன் நடிக்கிறார் என்பதையும் பார்த்தோம்.

மேலும் இப்படத்தை ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து மாதவன் இயக்குகிறார்.

தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எடுக்கப்படும் இந்த படத்தின் டீஸரும் சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் அவரின் ஜோடியாக சிம்ரன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் தமிழகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் சிம்ரன் நடித்திருந்தார்.

இவையில்லாமல் ஏற்கெனவே ‘பார்த்தாலே பரவசம்’, மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் மாதவனுடன் சிம்ரன் இணைந்து நடித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.

nineteen − five =