பார்ட்டிக்கு போனதால் எனக்கும் பிரச்சினை வந்தது..; #MeToo பற்றி நிவேதா

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘திமிரு புடிச்சவன்’.

அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார்.

கணேஷா டைரக்டு செய்திருக்கும் இந்த படத்தை தீபாவளியன்று திரைக்கு கொண்டு வரவுள்ளனர்.

இந்நிலையில் பாலியல் தொல்லை தொடர்பான மீ டூ பற்றி நிவேதா பெத்துராஜ் கூறியதாவது:-

“பெண்களிடம் யாராவது ஒருவன் தவறாக நடக்க முயன்றால், அந்த இடத்திலேயே எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

ரொம்ப நாட்கள் கழித்து அந்த தவறை வெளிப்படுத்தினால் சம்பந்தப்பட்டவர் மட்டுமல்லாமல், அவருடைய குடும்பமும் பாதிக்கப்படும்.

‘மீ டூ’ பிரச்சினையில் நானும் சிக்கி இருக்கிறேன். ஒரு ‘பார்ட்டி’க்கு போன இடத்தில், அது நடந்தது.

வெட்கம், பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை. தவறு என் மீது தான். நான் அந்த ‘பார்ட்டி’க்கு போயிருக்ககூடாது. போகாமல் இருந்தால் பலாத்கார முயற்சியை தவிர்த்து இருக்கலாம்.

இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். அதுபோன்று ஒரு சம்பவம் நடந்தால், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்’ என்று கூறினார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *