சர்காரிடம் மன்னிப்பு கேட்க முடியாது.; கெத்து காட்டிய முருகதாஸ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த சர்கார் படத்தை முருகதாஸ் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களை விமர்சித்திருந்தார் டைரக்டர் முருகதாஸ்.

இதனால் அதிமுக அமைச்சர்கள் உள்பட தொண்டர்கள் வரை அனைவரும் அதை எதிர்த்தனர். மேலும் தியேட்டர்களில் உள்ள பேனர்களையும் கிழித்து எறிந்தனர்.

இதனையடுத்து சென்சாருக்கு மீண்டும் படத்தை அனுப்பி அந்த காட்சிகளை நீக்கிவிட்டு பின்னர் திரையிட்டனர்.

இந்நிலையில் முருகதாஸ் இந்த சர்ச்சையில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வந்தன. இதனால் அவர் முன் ஜாமீன் பெற்றார்.

அவரை கைது செய்ய கூடாது என தடை உத்தரவும் நீதிமன்றம் பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில் டைரக்டர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இனி அரசை விமர்சித்து தனது படத்தில் காட்சி வைக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் முருகதாஸ் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் இனி இயக்கும் படங்களில் அரசின் திட்டங்களை விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாதமும் அளிக்க முடியாது என கெத்தாக தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என பன்ச் டயலாக் வைத்தவர் முருகதாஸ். தற்போது அதை நிஜத்தில் நிரூபித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *