சீதக்காதி படத்தில் 8 நிமிட காட்சிக்காக காத்திருக்கும் சூர்யா

விஜய்சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார்.

அய்யா ஆதி மூலம் என்ற கேரக்டரில் ஒரு திரைப்பட நடிகராக நடித்துள்ளார்.

பேஷன் ஸ்டூடீயோஸ் சுதன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தள்ளது.

30 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த ட்ரைலரை பார்த்து ரசித்துள்ளனர்.

இந்நிலையில் சீதக்காதி படத்தில் 8 நிமிடம் உள்ள ஒரு காட்சியை  ஒரே சிங்கிள் டேக்கில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி என்பதை அறிந்த சூர்யா தன் ட்விட்டரில் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

மேலும் சீதக்காதி படத்தை காண தான் ஆவலாக இருப்பதாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

Suriya Sivakumar‏Verified account @Suriya_offl

Suriya Sivakumar Retweeted VijaySethupathi

All the very best @VijaySethuOffl Heard there is a 8 min single shot scene..! #Seethakathi waiting for it!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *