ராயல்டி கேட்பது சரியல்ல..; இளையராஜாவுக்கு எதிராக எஸ்.ஏ.சி & பி.டி.எஸ்

ஒரு படத்தில் பணி புரிந்து முழு சம்பளம் பெற்றுக் கொண்டு இளையராஜா தன் பாடல்களுக்கு ராயல்ட்டி கேட்பது முறையல்ல என பிரபல தயாரிப்பாளர் பிடி. செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இவருக்கு ஆதரவாக 5 தயாரிப்பாளர்களும் கரம் கோர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இளையராஜாவின் ராயல்டி உரிமையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இவர்களை அடுத்து விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் இதே கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது:-

என்ஜினீயர், மேஸ்திரி, கொத்தனார்  என பலரும் சேர்ந்து வீட்டை உருவாக்குகிறார்கள். அதற்கு சம்பளம் வாங்குகிறார்கள்.

வேலை முடிந்தவுடன் அந்த வீடு உரிமையாளருக்கு சொந்தமான வீட்டை அவர்கள் கேட்க முடியுமா?

படத்தில் பணிபுரியும் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இயக்குனர், நடிகர், நடிகைகள், எல்லோரும் சம்பளம் வாங்கி கொண்டுதான்வேலை செய்கிறார்கள். இவர்கள் யாருமே ராயல்டி கேட்பதில்லை.

அதுபோல்தான் இசையமைப்பாளரும் கேட்பது தவறு. அவருடைய வேலைக்கு என்ன சம்பளமோ அதை முன்பே வாங்கி விடுகிறார் இளையராஜா.

எனவே பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும்.

தயாரிப்பாளர்களே படத்தின் நஷ்டத்தை சந்திக்கிறார்கள்.

எனவே இந்த ராயல்டியை பெற தயாரிப்பாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்”

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.

10 − two =