`இந்தியன்-2′ படத்தில் வில்லனாக நடிக்கும் இந்தி நடிகர்

கமல் நடிப்பில் உருவாகியுள்ள `விஸ்வரூபம்-2′ வரும் வெள்ளி அன்று ஆகஸ்ட் 10ல் வெளியாகவுள்ளது.

இப்படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் `இந்தியன்-2′ படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன்.

இதில் முதன்முறையாக கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வில்லனாக இந்தி நடிகர் அஜய்தேவ்கனும் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *