இந்தியன்-2 தான் கடைசிப்படம்; கமல் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி கிட்டதட்ட 60 ஆண்டுகளாக சினிமாவில் புகழோடு நிலைத்து நிற்கிறார் கமல்ஹாசன்.

அண்மையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இதனையடுத்து தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், கேரளாவில் கீழகம்பளம் பஞ்சாயத்தில் டுவென்டி-20 திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 37வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் துவக்கவிழாவில் பங்கேற்க கமல்ஹாசன் கேரளா சென்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது…

அடுத்த வருடம் 2019ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடும். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ம் தேதி துவங்குகிறது.

இந்தப்படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கமாட்டேன்.” என தெரிவித்தார்.

அண்மையில் கேரளா மற்றும் ஒடிசா முதல்வர்களை சந்தித்தேன். அவர்களின் யோசனைகள், திட்டங்களை தமிழ்நாட்டில்பிரதிபலிக்க உள்ளேன்” என்றார்.

அரசியல் காரணத்துக்காக தன் நடிப்பை கமல் நிறுத்தினாலும் இது கமல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *