“இதுதான் காதலா” படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா

குறிஞ்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி.எஸ்.முருகன் தயாரித்து வரும் படம் “இதுதான் காதலா”.

இந்த படத்தில் முற்றிலும் புதுமுக கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.

இது விஞ்ஞான ரீதியான கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருவதால் இதில் விஞ்ஞான மனிதனாக இந்த படத்தின் டைரக்டரும் தயாரிப்பாளருமான ராஜசிம்மன் நடித்திருக்கிறார். காதல் என்பதை காலம் தான் நிர்ணயிக்கும் என்பதையும் வலியுறுத்தி காதலையும் கம்ப்யூட்டரையும் இணைத்து புதிய பாணியில் திரைக்கதை அமைத்து “இதுதான் காதலா” படத்தை தயாரித்து வருகிறார்கள்.

இதில் கதையின் நாயகனாக சரண், நாயகியாக அஷ்மிதா இரண்டாவது நாயகியாக ஆயிஷா, மனித ரோபோவாக இயக்குநர் ராஜசிம்மன் காதல் சுகுமார், கூல்சுரேஷ், பாலு ஆனந்த், ‘பயில்வான்’ ரங்கநாதன், சின்ராஜ், திருப்பர் தெனாலி, தென்னவராயன், பாலாம்பிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – கணேஷ்ராஜா, இசை – தேசியவிருது பெற்ற சங்கர் அமைத்திருக்கிறார். எஸ்.எம்.பி.சுப்பு, கலை – ராஜரத்தினம் பாடல்கள் கவிஞர் வானம், யாமினி, குணசேகரன், மௌலன், ராஜசிம்மா எழுதியிருக்கிறார்கள். தயாரிப்பு – வி.எஸ்.முருகன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு டைரக்ஷன் – ராஜசிம்மா. இந்த படத்திற்கான டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் எம்.எம். தியேட்டரில் நடந்தது.

விழாவில் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன், ஊமை விழிகள் புகழ் டைரக்டர் ஆர்.அரவிந்த்ராஜ், படத்தின் இயக்குநர் தயாரிப்பாளர் ராஜசிம்மன் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *