ஜவ்வ்வ்வு வண்டி…; ஜருகண்டி விமர்சனம்

நடிகர்கள்:  ஜெய், டேனியல், ரெபா மோனிகா, ரோபோ சங்கர், இளவரசு, போஸ் வெங்கட் மற்றும் பலர்.

இசை  – போபோ ஷஷி

ஒளிப்பதிவு – ஆர்டி ராஜசேகர்

இயக்கம் – பிச்சுமணி

தயாரிப்பு – நிதின் சத்யா

டிராவல்ஸ் வைத்து லைஃப்பில் செட்டில் ஆக லோன் வாங்க அலைகிறார் ஜெய். அவரிடம் சொத்து மற்றும் பேங்க் பேலன்ஸ் எதுவும் இல்லை என்பதால் லோன் கிடைக்க தாமதம் ஆகிறது.

எனவே இவரின் நண்பர் டேனியல் உதவி செய்ய வருகிறார். அதன்படி குறுக்கு வழியில் இளவரசுவின் அட்வைஸ் படி லோன் வாங்க முயற்சிக்கிறார்கள்.

குறுக்கு வழியில் லோனும் கிடைத்து ஒரு டிராவல்ஸை வைக்கிறார்கள். அப்போது போலீஸ் போஸ் வெங்கட் மூலம் ஒரு பிரச்சினை வருகிறது.

திருட்டுத்தனமாக லோன் வாங்கியதால் தனக்கு பத்து லட்சம் வேண்டும் என்கிறார். 2 நாட்களில் பணத்தை கொடுக்காவிட்டால் ஜெயில்தான் என மிரட்டுகிறார்.

இதனால் நாயகி ரெபாவை கடத்தி, பணம் பறிக்க முயல்கிறார்கள் ஜெய்  மற்றும் டேனியல் டீம்.

இதன் பின்னர் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பல ட்விஸ்ட்டுகள் வைத்து ஜவ்வாக இழுத்து சொல்லியிருக்கிறார் டைரக்டர் பிச்சுமணி.

அழகான நாயகன் ஜெய் மற்றும் ரெபா மோனிகா. இருவரும் அழகாக வருகிறார்கள். கொஞ்சம் நடிக்கவும் முயற்சித்துள்ளனர்.

நாயகி புதுமுகம் என்பதால் பரவாயில்லை. ஆனால் சுப்ரமணியபுரம் படத்தை தவிர ஜெய் நடிப்பில் இதுவரை எந்த மாறுதலும் இல்லை. எந்தா? ஜெய் சாரே..? படத்தில் ரொமான்ஸ் இல்லை என்பதால் இவ்வளவு வருத்தமா? ஆக்சன் காட்சிகளிலும் டயர்ட் ஆகாமல் நடித்திருக்கிறார்.

டேனியல் மற்றும் ரோபோ சங்கர் இருந்தும் படத்தில் காமெடி இல்லை.

வில்லனாக அமித் குமார் திவாரி தன் கேரக்டரில் ஸ்கோர் செய்துள்ளார்.

மற்றபடி இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார், ஜெயக்குமார் தங்கள் கதாபாத்திரங்களில் நிறைவு.

போபோ ஷஷியின் இசையில் ஓரிரு பாடல்கள் கை கொடுக்கிறது. ஆனால் ஜெய் பாடிய பாடலை நிச்சயம் நாங்கள் சொல்லவில்லை. பின்னணி இசையில் ஸ்கோர் செய்கிறார்.

கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர் தன் பணியில் குறை வைக்கவில்லை.

ஆனால் எடிட்டர் பிரவீன் கே.எல். இன்னும் எடிட் செய்து ரசிகர்களின் நிலையை புரிந்திருக்கலாம்.

விறுவிறுப்பான திரைக்கதை. நல்ல ட்விஸ்ட். நல்ல கலைஞர்கள். இவர்களை வைத்து திரை ஓட்டத்தை படு வேகத்தில் குறை வைக்காமல் நகர்த்தியிருக்கலாம்.

ஜருகண்டி என்றால் வேகம். ஆனால் ஆமை வேகத்தில் தான் படம் உள்ளது.

ஜருகண்டி… ஜவ்வ்வ்வு வண்டி

 

Leave a Reply

Your email address will not be published.

two × one =