கட்டுக்கடங்காத காளை… அடங்க மறு விமர்சனம்

நடிகர்கள்: ஜெயம் ரவி, ராஷிகண்ணா, பாபு ஆண்டனி, பொன் வண்ணன், முனிஷ்காந்த் (ராமதாஸ்), சம்பத்ராஜ், அழகம் பெருமாள், மைம் கோபி, பூர்ணா மற்றும் பலர்
இயக்கம் – கார்த்திக் தங்கவேல்
ஒளிப்பதிவு – சத்யன் சூர்யன்
இசை – சாம் சி.எஸ்,
தயாரிப்பு – சுஜாதா விஜயகுமார் (ஹோம் மூவி மேக்கர்ஸ்)

கதைக்களம்…

தனி ஒருவன், போகன் படங்களை தொடர்ந்து இதிலும் ஜெயம் ரவிக்கு போலீஸ் வேடம். ஆனால் இதில் க்ரைம் ப்ரான்ச் எஸ்.ஐ. என்பதால் யூனிபார்ம் போடாத அதிகாரியாக வருகிறார்.

ஓவர் சின்சியராக இருப்பதே இவருக்கு பிரச்சினையாகிறது.

ஒரு சூழ்நிலையில் பணக்கார கிரிமினல்கள் பிடித்து சிறையில் அடைக்கிறார். போதிய ஆதாரம் இல்லை என இவர் மேல் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் உயர் அதிகாரிகளின் அதிகாரத்தால் சில நிமிடங்களிலேயே அவர்கள் சிறையில் இருந்து வெளியே வருகிறார்கள்.

ஜெயம் ரவியின் குடும்பத்தை அன்றைய தினமே தீர்த்து கட்டுகின்றனர்.

அதன் பின்னர் ஜெயம் ரவி என்ன செய்தார்? என்பதை மிகவும் வித்தியாசமான கொடுத்திருக்கிறார் டைரக்டர் கார்த்தி தங்கவேல்.

நடித்தவர்கள் எப்படி..?

ஜெயம் ரவியின் போலீஸ் கேரக்டர்களில் இந்த படமும் பேசப்படும். போலீஸ் வேலையை உதறிவிட்டு இவர் சவால்விடும் காட்சிகள் செம மாஸ்.

2ஆம் பாதியில் குற்றவாளிகளை பழிவாங்குகிறார். ஆனால் முதல் பாதியில் ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறார் என்பதுதான் தெரியவில்லை.

நாயகி ராஷி கண்ணாவுக்கு பெரிதாக வேலையில்லை.

வில்லன்கள் நாலு பேரும் போலீஸ் அதிகாரிகள் மைம் கோபி மற்றும் சம்பத் ஆகியோரும் நல்ல தேர்வு.

அழகம் பெருமாள், முனிஷ்காந்த் ஆகியோர் மனதில் நிற்கின்றனர்.

பொன் வண்ணன் மற்றும் சுபு பஞ்சு ஆகியோருக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார் டைரக்டர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் பணி எப்படி.?

சாயாலி பாடல் காதலர்களை கவரும். பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் இருவரும் தங்கள் பணிகளில் கச்சிதம். ஆனால் படத்தின் நீளத்தை கொஞசம் குறைத்திருக்கலாம். முதல் பாகம் ஸ்லோவாக இருக்கிறது.

வழக்கமான பழிவாங்கல் கதை என்றாலும் அதை வித்தியாசமான முறையில் கொடுத்துள்ள டைரக்டரை வெகுவாக பாராட்டலாம்.

குற்றவாளிகளை நான் கொல்ல மாட்டேன். ஆனால் அவர்களின் தந்தையே அவர்களை கொல்வார்கள் என்று சொல்லும்போதே படம் மீதான எதிர்பார்ப்பு எகிறுகிறது.

குற்றவாளிகளை ஒவ்வொருவரையும் நிறுத்தி நிதானமாக கொலை செய்வது சூப்பர். அதிலும் ஆன்லைன் வீடியோ கேம்மில் ஒருவனை கொல்வது வித்தியாசமான ஐடியா.

மொத்தத்தில் அடங்க மறு… கட்டுக்கடங்காத காளை

 

Leave a Reply

Your email address will not be published.

13 − two =