வாரிசு நடிகர்கள் பிரசாந்த் & விக்ரம்பிரபு நேரடி மோதல்
அடுத்த வாரம் டிசம்பர் 14ல் பிரசாந்த் நடித்துள்ள ஜானி மற்றும் விக்ரம் பிரபு நடித்துள்ள துப்பாக்கி முனை ஆகிய இரண்டு படங்களும் நேரடியாக மோதவுள்ளன.
வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள ஜானி படத்தில் பிரசாந்த் சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடித்துள்ளனர். முக்கிய கேரக்டரில் பிரபு,ஆனந்த்ராஜ் நடித்துள்ளனர்.
பாடல்களை இல்லாத இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்துள்ளார்.
தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள `துப்பாக்கி முனை’ படத்தில் விக்ரம் பிரபு, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.