ஜாலி… ஜானி திரை விமர்சனம்
நடிகர்கள்: பிரசாந்த், சஞ்சிதா செட்டி, பிரபு, ஆனந்த்ராஜ், சாயாஜி ஷின்டே, தேவதர்ஷினி மற்றும் பலர்
இயக்கம் – வெற்றி செல்வன்
ஒளிப்பதிவு – எம். வி. பன்னீர்செல்வம்
இசை – ஜெய்கணேஷ்
தயாரிப்பு – தியகராஜன்
தயாரிப்பு நிறுவனம் – ஸ்டார் மூவிஸ்
கதைக்களம்…
நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஜானி.
பிரசாந்தின் காதலி சஞ்சிதா செட்டி. சஞ்சிதாவின் அப்பா வாங்கிய கடனை அடைக்க ஒன்றரை கோடி தேவைப்படுகிறது. எனவே தன் காதலிக்கு உதவ குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார் பிரசாந்த்.
இவர் ஏற்கெனவே பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் ஆகியோருடன் இணைந்து சூதாட்ட கிளப் ஒன்றை நடத்தி வருகிறார்.
அப்போது கோடிக்கணக்கான ஒரு பொருளை வாங்க இவரது பார்ட்னர் கேரளாவுக்கு செல்கிறார்.
எனவே அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் பிரசாந்த்.
அதன்படி கொள்ளையும் அடிக்க, அந்த பார்ட்னர் கொல்லப்படுகிறார்.
இது பிரபுவிடம் பேசும்போது அவருக்கு தெரிய வருகிறது.
அதன்பின்னர் பிரசாந்த் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளுமே படத்தின் கதை.
இறுதியில் எப்படி தப்பித்தார்? பணம் கைக்கு கிடைத்ததா? சஞ்சிதாவுடன் செட்டில் ஆனாரா? என்பதுதான் மீதிக்கதை.
நடித்தவர்கள் எப்படி..?
ஓவர் பில்டப், பன்ச் டயலாக் என எதுவும் இல்லாமல் கதையின் தேவைக்கு ஏற்ப நடித்துள்ளார் பிரசாந்த். நல்ல ட்விஸ்ட்டுகள் வைத்து இப்படத்தை படமாக்கியுள்ளார் டைரக்டர் வெற்றி செல்வன்.
பிரசாந்த் ஓவர் குண்டாக உள்ளார். அதை குறைப்பது நல்லது. ஆனால் அவரது பார்ட்னர்கள் பிரபு மற்றும் ஆனந்த்ராஜ்க்கு உடல் சைசில் மேட்சாக உள்ளார் என்பதால் இந்த படத்தில் ஓகே சொல்லலாம்.
அரை குறை ஆடையில் வந்து நடிப்பிலும் கவர்கிறார் சஞ்சிதா.
பிரபு, ஆனந்த் ராஜ், சாயாஜி ஷிண்டே என அனைவரும் கச்சிதம்.
சோனா ஒரு காட்சியில் வருகிறார். தேவதர்ஷினி தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் பணி எப்படி..?
பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். படத்தில் பாடல்கள் இல்லை. அதுவே பெரிய ஆறுதல். இசையமைப்பாளர்ஜெய்கணேஷ் ஸ்கோர் செய்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் எம்.வி. பன்னீர் செல்வம் மற்றும் படத்தொகுப்பாளரையும் வெகுவாக பாராட்டலாம்.
இது ஹிந்தி படத்தின் ரீமேக் என்று கூறப்ட்டாலும் தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து படமாக்கியுள்ளார்பி.வெற்றிசெல்வன். வெற்றிச்செல்வனின் வெற்றி பட வரிசையில் இது அமையும்.
மொத்தத்தில் ஜானி… ஜாலி