ரஜினி படத்தை நிறுத்துங்க.; வரிசை கட்டும் ஜீனியர் நடிகர்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் கடந்த நவம்பர் 29ஆம் தேதி வெளியானது.
550 கோடியில் உருவான இப்படம் உலகம் முழுவதும் 15000 தியேட்டர்களில் வெளியானது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டது.
இப்படம் வெளியானது முதல் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது.
சென்னையில் மட்டும் 25 கோடியை நெருங்கியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ரூ. 700 கோடியை வசூலை கடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
வார நாட்களில் பள்ளித் தேர்வுகள் நடைபெறுகின்ற போதிலும் வார இறுதி நாட்களில் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கிட்டதட்ட 3 வாரங்களை கடந்துள்ள நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 6 முக்கிய படங்கள் வெளியாகவுள்ளது.
எனவே 2.0 படத்தை நிறுத்துவிட்டு புதுப்படங்களை திரையிட சொல்லி தியேட்டர்காரர்களை விநியோகஸ்தர்கள் வற்புறுத்தி வருகிறார்களாம்.
தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி ஆகியோர் நடித்த படங்கள் டிசம்பர் 21ஆம் தேதியில் வெளியாகவுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
