மகளிரின் மௌன மொழி… காற்றின் மொழி விமர்சனம்

காற்றின் மொழி, காற்றின் மொழி விமர்சனம், காற்றின் மொழி திரை விமர்சனம், காற்றின் மொழி ஜோதிகா விதார்த், காற்றின் மொழி படம் எப்படி?

நடிகர்கள்:  ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு, எம்எஸ் பாஸ்கர், மனோபாலா, குமரவேல், யோகிபாபு, சிம்பு, மதுமிதா மற்றும் பலர்.
இயக்கம் – ராதாமோகன்

இசை  – காசிப்
ஒளிப்பதிவு – முத்துசாமி
தயாரிப்பு – தனஞ்செயன்

கதை எப்படி..?

அடிக்கடி ஹலோ சொல்லும் ஜோதிகாவுக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு விமர்சனத்தை பார்ப்போம்.

கணவன் விதார்த், ஒரு மகன் என சின்ன குடும்ப வளையத்துக்குள் வாழும் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சராசரி பெண் ஜோதிகா.

+2 வகுப்பில் பெயினாலும் இவருக்கு ஒரு நல்ல வேலைக்கு சென்று நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என வைராக்கியம் கொண்டவர் ஜோ.

அப்போது வானொலி முமூலம் இவரது வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் கிடைக்கிறது.

அதாவது ஒரு தனியார் வானொலியில் நிகழ்ச்சியில் பரிசு கிடைக்க, அங்கே செல்ல நேரிடுகிறது.

அப்போது இவரது குறும்புத்தனத்தால் இவருக்கு ரேடியோ ஜாக்கி வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

அது இரவு நேர பணி என்றாலும் மனதுக்கு பிடித்த வேலையை மகிழ்ச்சியாக செய்து வருகிறார். ஒரு நாள் நடிகர் சிம்பு கூட இவரது ரசிகராக ரேடியோ ஸ்டேசனுக்கு வருகிறார்.

நாட்கள் ஆக, இவரது இரவு வேலையும், இவர் போனில் மற்ற ஆண்களுடன் பேசுவதால் கணவருக்கும் இவருக்கும் பிரச்சினை எழுகிறது.

இதனால் வேலையை விடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் ஜோதிகா.

சராசரி பெண்களை போல அவர் வேலையை விட்டாரா? அல்லது வேலையுடன் குடும்பத்தையும் கவனித்தாரா? குடும்ப பிரச்சினைகளை எப்படி சமாளித்தார் என்பதே இந்த காற்றின் மொழி.

படத்தில் நடித்தவர்கள் எப்படி..?

திருமணத்திற்கு முன்பு ஜோதிகா நடிக்கும்போது அவரிடம் ஒரு துறுதுறுவென்ற நடிப்பு இருக்கும். தற்போது திருமணத்திற்கு பிறகும் அதே  துறுதுறு பழக்கம் மெச்சூராகி நல்ல முதிர்ச்சியை காட்டுகிறது.

அத்துடன் காமெடி கலந்து செண்டிமெண்டில் உருக வைத்து விஜயலட்சுமி என்ற கேரக்டராகவே வாழ்ந்துள்ளார்.

மாடர்ன் பெண்கள்தான் எங்களுக்கு ரோல் மாடல்கள் என்னும்போது நம்மை கலங்க வைக்கிறார்.

அழகான மனைவி, அன்பான மகன், அளவான செலவு என சராசரி கணவனாக விதார்த். மனைவி இரவு நேர வேலைக்கு செல்வதால் இவருக்கு ஏற்படும் மன உளைச்சலை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

ரேடியோ ஸ்டேசன் நிர்வாகியாக லட்சுமி மஞ்சு. நடிப்பிலும் அழகிலும் குறையில்லை. சில நேரம் ஓவர் டோசாக தெரிகிறது.

மற்றொரு ரேடியோ ஜாக்கியாக குமரவேல். எப்படி பார்த்தாலும் ராதா மோகன் இவரிடம் சிறந்த நடிப்பை வாங்கி விடுவார். அதை இதிலும் செய்திருக்கிறார்.

மாடி படி ஏறி இறங்கும் காட்சிகளில் மயில்சாமி. காமெடி சாமி. சிரிப்புக்கு இவர் கியாரண்டி.

நதி எங்கே போகிறது பாடல் காட்சியில் எம்எஸ். பாஸ்கர் நம்மை உருக வைக்கிறார். மனோபாலா மனநிறைவான நடிப்பை தருகிறார்.

கெஸ்ட் ரோலில் யோகிபாபு. இவர் தோன்றினாலே தியேட்டரில் சிரிப்பு தான். ஒரு காட்சியில் வருகிறார் சிம்பு. ஜோதிகாவிடம் ஆட்டோகிராப் வாங்கி செல்கிறார்.

மற்ற கலைஞர்கள் எப்படி..?

காசிப் இசையில்… கிளம்பிட்டாளே விஜயலட்சுமி, டரட்டி பொண்டாட்டி பாடல்களை ரசிக்கலாம்.

முத்துசாமி ஒளிப்பதிவில் காட்சிகள் இனிமை.

ஜோதிகா ஆர்.ஜே. வாக பணிபுரியும் போது வழங்கும் ஆலோசனைகள் அருமை.

சில காட்சிகளில் கணவன்மார்களில் சந்தேக பார்வைக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார். எந்த ஒரு விஷயத்தையும் சிறந்த முறையில் பெண்கள் அனுகினால் அவர்களுக்கு பாதிப்பில்லை என்பதையும் உணர்த்தியுள்ளார்.

கமர்சியல் டைரக்டர், ஆக்சன் டைரக்டர் வரிசையில் குடும்ப டைரக்டர் என ராதாமோகனுக்கு பெயர் வைக்கலாம். குடும்பத்துடன்பார்க்கும் வகையில் ஒரு படத்தை கொடுத்துள்ளார்.

காற்றின் மொழி மகளிரின் மௌன மொழி

 

Leave a Reply

Your email address will not be published.

2 × 2 =