ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் காடுவெட்டி படத்தின் டீசர் அப்டேட்

சமீபத்தில் விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்ப்பை பெற்ற படம் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் வெளியான “விசித்திரன்“. பல பிரபலங்கள் இப்படத்தை பாராட்டி வாழ்த்தினர். விசித்திரான் படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிப்புக்கென பல பாராட்டுகளை பெற்றார் அந்த அளவிற்கு அவரின் கதாபாத்திரத்தின் வலியை பார்வையாளர்களுக்கு உணர்த்தினார்.

தற்போது,

நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் காடுவெட்டி படத்தின் டீசர் தயாராகி வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். “காடுவெட்டி” படத்தின் பர்ஸ்ட் லுக் 2020ஆம் ஆண்டே வெளியான நிலையில் தற்போது படம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

நாயகனாக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பர்ஸ்ட் லுக்கில் ஆர்.கே.சுரேஷ் யாரையோ பழிவாங்க ரயில் நிலையத்தில் காத்திருப்பது போல் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மீசையை முறுக்கியபடி காட்சியளிக்கிறார். படத்தை சோலை ஆறுமுகம் இயக்குகிறார். இப்படத்தை சோழன் மீடியா மற்றும் மஞ்சள் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் இனைந்து தயாரித்துள்ளனர்.

விசித்திரன் திரைப்படதில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பின் உச்சத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில் இந்த படமும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

3 × one =