இந்தியன் 2 படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக காஜல் அகர்வால்
2.0 படத்திற்காக கிட்டதட்ட 4 ஆண்டுகள் கடின உழைப்பை முடித்துவிட்டு விரைவில் இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர்.
கமல்ஹாசன் நடிக்கவுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
வருகிற டிசம்பர் 14ல் இதன் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் முதன்முறையாக கமலுக்கு நாயகியாக நயன்தாரா நடிப்பார் என கூறப்பட்டது.
தற்போது காஜல் அகர்வால் நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு பாரீஸ் நகரில் காஜலுக்கு மேக்கப் டெஸ்ட் நடத்தியிருக்கிறாராம் இந்த பிரம்மாண்ட் டைரக்டர்ஷங்கர்.