தனி மனித ஒழுக்கம் குழி தோன்டி புதைக்கப்பட்டது- நடிகர் சிவகுமார்

தனி மனித ஒழுக்கம் குழி தோன்டி புதைக்கப்பட்டது.

தமிழ் தமிழ் என்று பேசி , தமிழ் நாட்டில் தமிழ் எவ்வாறுள்ளது இன்று என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

சாராய கடையை திறந்து பணம் பண்ணலாம் என்ற உண்ணத திட்டத்தின் முதல் முன்னோடி. இந்த ஒரு திட்டத்தினால் தமிழகம் அடைந்த துயரம் சொல்ல தேவையில்லை. 70 களின் கடைசியில் எனக்கு நினைவு தெரிந்து தண்ணி அடித்தவனை ஒரு ஈன பிறவியாகவும் , கெட்டவார்த்தையாக இருந்த தண்ணி இன்று ஆம் அங்குன்றும் இங்குன்றமாக பான்டி, மற்றும் பெங்களூர் சென்று குடித்ததால் யாருக்கும் பெரிய நட்டம் ஏற்படவில்லை, ஆனால் இன்று அது புற்று நோயாக பரவி எத்தனை துன்பங்களுக்கு காரணம். இரண்டு தலைமுறையவே உடல் மனரீதியாக சொங்கிகளாக மாற்றியுள்ளது.

முதன் முதலில் ஊழல் என்பதை MEGA sizeல் பண்ணலாம் என்று காட்டி கொடுத்து திட்டம் தான் வீராண திட்டம். கம்பி எண்ண பல முறை நேரிட்டும் அதை சட்ட ஒட்டைகளை பயன்படுத்தியும் காலம் தாழ்த்தியும் தப்பிய பெருமகனார். இன்னும் பல இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அவரது இனைவி் மகளின் 2g spectrum scandal.

ஜனநாயகமும், சமத்துவமும் பேசும் கட்சியில் என்றாவது 50 ஆண்டுகளில் நல்ல அறிவாளியோ, தலைவராக உருவாகும் தகுதி வேறு ஒருவருக்கும் இல்லாமலே போய் விட்டதா Emergencyயில் ஸ்டாலின் தவிர கழக உடன்பிறப்புகள் யாரும் சிறைக்கு போகவில்லையா , மிதிபடவில்லையா.
கனிமொழி, மாறன், மாறன் மகன்கள் இவர்கள் எல்லாம் எப்படி?. அண்ணா அறிவாலயம் கட்சி அலுவலகம், குடும்ப சொத்தாக மாற்றப்பட்டு sun TV officeக செயல்பட்டது மறக்க முடியுமா.குடும்ப தகராறு காரணமாக மதுரை தினகரன் அலுவலகம் சுறையாடி இருவர் மரணித்தது கலைஞருக்கு தெரியாதா. யோசியுங்கள் கலைஞரின் ஏது இவ்வளவு சொத்து,  பெற்ற தாய் தன்னுடன் இருந்தால் சொந்தங்கள் வந்து ஒட்டி கொள்ளும் என்று அஞ்சிய தார்மிக தலைவர்

ஆகசிறந்த அரசியில் சாணக்கியன் காவிரி பிரச்சினை வெவ்வேறு நேரங்களில் வாய்பிருந்தும் ஆணித்தரமாக முடிவு எடுக்க தவறியது.

இவற்றுக்கெல்லாம் பகுடமாக கச்ச தீவு இந்திரா இவர் ஆட்சியில் தாரை வார்த்ததும் கடைசி போரில் பிரபாகரன் மற்ற பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அவர் பதவியும் மகள் செய்த ஊழலாலுக்காக கிடைத்த சிறை தவிர்ப்பதற்கும் சக்கர நாற்காலியில் டெல்லி சென்ற வீர மகனார் அல்லவா.

இன்னும் சொல்லாம். மொத்ததில் ஆரம்பத்தில் கொள்கை பிடிப்போடு நன்மை செய்ய வேண்டும் என்று வந்தவர்தான் , பரதேசியாக இருந்து பணமும், பதவி சுகமும் கிடைக்கும் போது அதை தக்க வைத்து கொள்ள பெரும்பாலான சராசரி மனிதர்கள் பொது நலத்தை பின் தள்ளி சுயநலம் ஒன்றே என்று செயல்படுவது உலக இயல்பு, அதற்கு இவர் கடுகளவும் விளக்கல்ல.
.
சில நன்மைகள் நடந்தது உண்மை தான் , ஆனால் அதை காட்டிலும் தமிழகத்தில் அன்று சீரழிவு விதைத்தது இன்று ஆலவிருட்சமாக பூதாகரமாக வளர்ந்து மிரட்டுகிறது என்பதும் நிதர்சனம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *