திமுக தலைவர் கலைஞரின் உடலை காந்தி மண்டபத்தில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு

கலைஞர் உடலை காந்தி மண்டபத்தில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு!

முன்னதாக, கலைஞர் குடும்பத்தினர் மெரினாவில் அடக்கம் செய்ய முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்..

முக தலைவருக்கு ராஜாஜி மண்டபம் , காமராஜர் நினைவிடம் அருகே அடக்கம் செய்ய 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யத் தயார் – தமிழக அரசு.

மெரீனாவில் இடம் ஒதுக்க மறுப்பு..

தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவரும், தலைசிறந்த தமிழறிஞராகவும் திகழ்ந்த டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தத்தை தருகிறது. #டிடிவி. தினகரன்

அண்ணா பல்கலைக்கழகம் எதிரே கலைஞர் உடலை அடக்கம் செய்வதற்கு இரண்டு ஏக்கர் இடம் ஒதுக்கீடு மெரினாவில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை என்று தலைமைச் செயலர் அறிவிப்பு.

தலைவர் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கவேண்டும். 80 ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருந்த தலைவர் என்ற தார்மீக உரிமைக்கு மரியாதை அளிக்கவேண்டும் : மு க ஸ்டாலின் முதலமைச்சருக்கு மீண்டும் கடிதம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *