ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கமல்-ரஜினி கருத்து

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் அண்மையில தேர்தல் நடைபெற்றது.

இதனையடுத்து இன்று 5 மாநில தேர்தல் முடிவுகளை அறிவித்து வருகின்றனர்.

இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளனர்.

கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் “புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது”என பதிவிட்டுள்ளார்.

சென்னை விமான நிலையம் சென்ற ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது… “ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்,பாஜகவுக்கு பின்னடைவைக் காட்டியிருக்கிறது. பாஜக தன் செல்வாக்கை இழந்துள்ளதை குறிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *