கமலுடன் இணைந்து விக்ரம் தரும் மெகா தீபாவளி ட்ரீட்

நடிகர்கள் கமல் மற்றும் விக்ரம் இருவரும் பரமக்குடியைச் சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரியும்.

ஒரே ஊரை சேர்ந்த இவர்கள் இருவரும் ஒரு படத்தில் தற்போது இணைந்து பணியாற்றுகிறார்கள்.

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக கமல் நடிக்கிறார்.

இப்படத்தை தூங்காவனம் பட புகழ் டைரக்டர் ராஜேஷ் எம் செல்வா இயக்குகிறார்.

கமலின் 2வது மகள் அக்ராஹாசன் இதில் முக்கிய கேரக்டரில் ஒன்றில் நடிக்கிறார்.

இவர் ஏற்கெனவே அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை தீபாவளி ஸ்பெஷலாக படக்குழு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இப்படம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 45 படைப்பாகவும் விக்ரமின் 56வது படமாகவும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *