ஒரு தந்தையாக இருந்து சுஜா வருணி திருமணத்தை நடத்தும் கமல்

ஆண் தேவதை, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை சுஜா வருணி.

வெள்ளித்திரையில் பிரபலமாக பல வருடங்களை இவர் எடுத்துக் கொண்டாலும் சின்னத்திரையில் ஒரே நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானார்.

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

விரைவில் சுஜா வருணி திருமணம் செய்துக கொள்ளவுள்ளார்.

மறைந்த நடிகர் சிவாஜியின் பேரன் சிவாஜிதேவ் என்ற சிவகுமாரை விரைவில் மணக்க இருக்கிறாராம்.

இந்நிலையில் தன் திருமணத்துக்கான முதல் அழைப்பிதழை நடிகர் கமலை சந்தித்து அழைத்துள்ளார் சுஜா வருணி.

இதுபற்றி அவர் கூறும்போது ‘என் தந்தை இறந்துவிட்டார். எனவே என் திருமணத்தை எனது தந்தை இடத்தில் இருந்து கமல் தான் நடத்தி வைக்க உள்ளார்.

நான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே என் விருப்பத்தை அவரிடம் சொன்னேன். அவரும் ஒப்புக் கொண்டார்.

அதன் படி தற்போது என் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க உள்ளார்’ என  தெரிவித்துள்ளார் சுஜா.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *